சுயசரிதை எழுதுகிறார் கமல்! ஆனால் ஒரு விஷயம் பற்றி எழுதமாட்டாராம்? டீட்டெய்ல்…. டீட்டெய்ல்….

யார் சுயசரிதை எழுதினாலும், அது வெளியே வந்த சில நாட்களுக்கு நாட்டில் 144 போடுகிற அளவுக்கு மன ஒழுங்குக்கு பங்கம் ஏற்படும். ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் சிக்கியது பற்றிய உண்மையை ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி எழுதியது எவ்வளவு சீரியஸ்சான விஷயமோ, அதற்கும் சற்றும் குறைவில்லை பல சுயசரிதைகளின் சீரியஸ் விளைவுகள்.

அட… நம்ம ஷகிலா கூட சுயசரிதை எழுதிக் கொண்டிருக்கிறார். யார் யார் குட்டுப்பட போகிறார்களோ? இப்போது சுயசரிதை எழுதும் ஆசை கமல்ஹாசனுக்கும் வந்திருக்கிறது. சிட்டிசன் கே என்ற பெயரில் அந்த சுயசரிதையை எழுதிக் கொண்டிருக்கிறாராம் அவர். தான் சினிமாவில் வளர்ந்த சூழ்நிலைகள், பிரச்சனைகள், தன்னை வளர்த்துவிட்டவர்கள், வாரி விட்டவர்கள் என்று எல்லாரை பற்றியும் அதில் குறிப்பிடப் போகிறாராம்.

இந்த சரிதையில்தான் ஒரு விஷயத்திற்கு தடா! என்னவாம்? இதில் தனது குடும்பத்தை பற்றியோ, மகள்களை பற்றியோ எழுதப் போவதில்லையாம் அவர்.

கமல் சார்… எந்த இடத்திலேயும் இது மாதிரி கோடு விடாதீங்க. கோடிட்ட இடங்களை நிரப்பப் போவது கொதிக்க கொதிக்க சிலரது விமர்சனமாகவும் இருக்கும்.

Read previous post:
வராத சந்தானமே வந்துட்டாரு… அவ்ளோ பெரிய அன்பா அது?

அவர் படத்தின் ஆடியோ விழா என்றால் கூட அந்த இடத்தில் சந்தானம் இருக்க மாட்டார். பட பிரமோஷன்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர் நடிகைகளில் அஜீத் நயன்தாராவுக்கு முதலிடம்...

Close