கன்னடர் பிரபுதேவாவின் படம் ரிலீஸ்! தியேட்டர்களில் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவா?
காவேரி விவகாரத்தில் கன்னடர்களின் சண்டித்தனம், தமிழ்நாட்டை கொந்தளிக்க வைத்திருக்கிறது. போதும் போதாதற்கு காவிரி மேலாண்மை வாரிய விஷயத்தில் மத்திய அரசு குட்டிக்கரணம் அடித்ததில் இன்னும் நொந்து போயிருக்கிறார்கள் விவசாயிகள். இந்த நிலையில்தான் பிறப்பால் கன்னடரான பிரபுதேவா தயாரித்து நடித்திருக்கும் ‘தேவி’ திரைப்படம் வருகிற 7 ந் தேதி திரைக்கு வருகிறது.
முக்கி முனகி தியேட்டர் போடப்பட்டு வந்தாலும், ‘தேவி’ படத்திற்கு தியேட்டர் கொடுத்த டெல்டா பகுதி தியேட்டர்காரர்கள் படு திகிலுக்கு ஆளாகியிருக்கிறார்களாம். சித்தராமய்யாவுக்கு எதிராகவும், காவேரி விஷயத்தில் தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசுக்கு எதிராகவும் போராட்டம் வெடித்திருக்கிற நிலையில், இந்த தேவி திரைப்பட விவகாரமும் படு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறதாம் விவசாயிகளை.
போராட்டம் இன்னும் கொழுந்துவிட்டு எரியும் நேரத்தில், தேவி படத்தை திரையுடுவதா என்கிற அச்சம் தொடர்ந்து தியேட்டர்காரர்களுக்கு ஏற்பட்டு வருவதுதான் முக்கிய செய்தி.
என்னதான் தமன்னா தன் சிவப்புத் தோலை காட்டினாலும், அதைவிட சிவப்பா எரியுதே பிரச்சனை? என்னம்மா செய்றது?
To listen audio click below:-