பாகுபலி ராஜமவுலி அப்பாவுடன் கூட்டு சேரும் விஜய்!
அடைஞ்சா வெற்றி. அடையலேன்னாலும் வெற்றி என்கிற தீவிர சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறார் விஜய். நடுவில் ஒரு ‘புலி’ சொதப்பினாலும், மீண்டும் சுதாரித்துக் கொண்ட விஷயத்தில், விஜய் கில்லிதான்! அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பைரவாவுக்கு இப்பவே தியேட்டர்களில் வெல்கம் போர்டு மாட்டாத குறை. இந்த நேரத்தில்தான் அவரது அடுத்தப்படம் பற்றிய அரசல் புரசல் தகவல்கள் அடடா… என்று பாராட்ட வைக்கிறது.
விஜய்யின் அடுத்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. அதை அட்லீ இயக்குகிறார். இதற்காக அட்லீ கேட்ட சம்பளம் பதினெட்டு கோடி. விஜய் தலையிட்டு அதை பதினைந்து கோடியாக பேசி முடித்தார் என்பதெல்லாம் தனிக்கதை. ஆனால் அட்லீயின் தெறி அப்படி இப்படியும் விமர்சிக்கப்பட்டதில், சற்றே உஷாரான விஜய், திரைக்கதை வசனம் மட்டும் அட்லீ செய்யட்டும். கதை விஷயத்தில் நாம் வேறொருவரை நம்புவோம் என்ற முடிவுக்கு வந்தாராம். அந்த வேறொருவர்தான் ரொம்ப ரொம்ப விசேஷமானவர்.
பாகுபலி படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத்துதான் அவர்! பாகுபலி படத்தின் கதையே இவருடையதுதான். அதுமட்டுமல்ல, சமீபத்தில் இந்தியில் வெளிவந்து கோடானு கோடி ரூபாய்களை குவித்து பெரும் வெற்றி அடைந்த ‘பஜிரங்கி பைஜான்’ படத்தின் கதையும் இவருடையதுதான்.
அப்படியென்றால் விஜய் படங்களிலேயே மிக மிக விசேஷதமான படமாக இதை கருதிவிட வேண்டியதுதான்!
To listen audio click below:-