பங்களாவில் சிக்கிக் கொண்ட நிகிஷா படேல்?
‘கரையோரம்’ பிரஸ்மீட்டுக்கு வந்திருந்த நிகிஷா பட்டேலை சுற்றி சுற்றி வந்து ரசித்துக் கொண்டிருந்தது மொத்த கூட்டமும். முன்னால் பார்த்தால் பேரழகு, பின்னால் பார்த்தால் முதுகழகு என்று திரும்பிய இடமெல்லாம் தித்தித்திப்பாக இருந்தார் அவர். தமிழுக்கு அவர் ஒன்றும் புதுசு இல்லை. ஏற்கனவே ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டியிருந்தாலும், இந்த படம் விசேஷமாக இருக்கும் போலிருந்தது. ஏனென்றால் இந்த படத்தில் ஒரு பங்களாவில் தனியாக சிக்கிக் கொள்கிறாராம் அவர். யாரிடம்? அவர்கள் அவரை என்ன பண்ணினார்கள்? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும் போலிருக்கிறது. (‘தெரிய’வந்தால் சந்தோஷம்தான்)
ஜே.கே.எஸ் என்பவர் இயக்கியிருக்கிறார். கன்னடத்தில் இவரது பல படங்கள் பெரிய ஹிட் ஆகியிருக்கிறதாம். தமிழ், கன்னடம் இரு மொழிகளில் இந்த படத்தை எடுக்கப் போகிறார்கள். சென்னையிலிருந்து மங்களூருக்கு போகும் வழியில் ஒரு பீச் ஹவுசில் நிகிஷா சிக்கிக் கொள்வதுதான் கதை என்றாலும், இந்த படத்தில் மிக முக்கியமான ரோல் செய்யப் போகிறார் இனியா. ‘வில்லியா?’ என்றால், ‘படத்தை பார்த்துட்டு சொல்லுங்க’ என்கிறார். அப்படின்னா அதேதான் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.
குறிப்பிட்ட இடத்தை விட்டு வெளியில் நகராமல் ஒரே இடத்தில் கதை சொல்வது என்பதே பெரிய சவால். ஜனங்க சோர்ந்து போகாமலிருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் நாங்க அப்படியொரு அட்டம்ப்ட் பண்ணியிருக்கோம். அதே நேரத்தில் ஒவ்வொரு காட்சியும் அடுத்து என்ன அடுத்து என்னன்னு பரபரக்க வைக்கும் என்கிறார் ஜே.கே.எஸ்.
நிகிஷா பட்டேலை எவ்வளவு நேரம் காட்டினாலும் அப்படியே உட்கார்ந்திருக்க ரசிகர்கள் ரெடி. ஆனால் அவரை காட்டுகிற விதத்தில் காட்ட நீங்க ரெடியா சாரே?