கார்த்தி பண்ணியது கரெக்டா? அருள்நிதி முறைத்தது ரைட்டா?
ஏக கடுப்பில் இருக்கிறார் அருள்நிதி. வம்சம், மவுன குரு, தகராறு என ஆடிக்கொரு படம், அமாவாசைக்கொரு படம் என்று தள்ளி தள்ளி வந்தாலும், சொல்லிக் கொள்ளும் நடிகர்கள் லிஸ்ட்டில்தான் இருக்கிறார் அவர். மார்க்கெட்டில் நல்ல இடத்தில் இருக்கும் ஹீரோக்களுக்கு கதை சொல்ல கிளம்பும் இயக்குனர்கள், மறக்காமல் அருள்நிதிக்கும் ஒரு போன் அடிப்பது வாடிக்கையாக இருக்கிறது. அப்படீன்னா அண்ணாச்சி முக்கியமானவர்தானே?
இருக்கட்டும்… இப்போது நாம் சொல்ல போவது இன்னொரு முக்கியமான மேட்டர். கொஞ்ச நாட்களாகவே கார்த்தி மீது கடுப்பிலிருக்கிறாராம் அருள்நிதி. ஏன்?
குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா, அப்படத்தின் வெற்றிக்கப்புறம் கார்த்தியிடம் கதை சொல்லி ஆஹா ஓஹோ என பாராட்டுகளை பெற்றிருந்தார். அப்படியே அவரை வைத்து படம் இயக்க அட்வான்சும் பெற்றிருந்தார். அட்வான்சை கொடுத்த கார்த்தி உடனடியாக தேதியை ஒதுக்கி தர வேண்டுமல்லவா? சுமார் ஒரு வருஷம் சும்மாவே உட்கார வைத்துவிட்டாராம். குட்டிப்புலி படம் ஹிட்டுன்னு உலகம் பேசும்போதே படம் இயக்கினால்தானே ஒரு ‘மருவாதி’ இருக்கும்.? அப்படியொரு படம் வந்ததையே மக்கள் மறந்தபின்பு யாரிடம் போய் என்னவென்று அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும்? தேதிய கொடுங்க. இல்லேன்னா கொடுத்த அட்வான்சை திருப்பி வாங்குங்க. நான் வேறொரு கடையில வெற்றிலை பாக்கு வாங்கிக்கிறேன் என்று பலமுறை கேட்டும் கார்த்தி சைடிலிருந்து நோ ரீயாக்ஷன்.
இந்த நேரத்தில்தான் அருள்நிதியிடம் இந்த கதையை சொன்னாராம் குட்டிப்புலி முத்தையா. ஆஹா… அருமை… பிரமாதம்… என்று போற்றிய அருள்நிதி உடனே தேதிகளையும் ஒதுக்கிக் கொடுத்துவிட்டார். ஷுட்டிங் போக வேண்டியதுதான் பாக்கி. தகவலை அறிந்த கார்த்தி, முத்தையாவை அழைத்து, ‘நாமளே படம் பண்ணுவோம். இதை முடிச்சுட்டு அருள்நிதிகிட்ட போங்க. இல்லேன்னா யாருகிட்ட வேணும்னாலும் போங்க. கொடுத்த அட்வான்சுக்கு நீங்க என் படத்தைதான் ஆரம்பிக்கணும்’ என்று சொல்ல, தலை கிர்ராகிவிட்டது முத்தையாவுக்கு.
கார்த்தியா? அருள்நிதியா? அருள்நிதியா? கார்த்தியா? கா…வா? அ…..வா? இப்படி மாற்றி மாற்றி குழம்பி, கடைசியில் கார்த்தி படத்திற்கே முன்னுரிமை கொடுக்க…. கடுப்பிலிருக்கிறாராம் அருள்.
முன்னப்போனா முட்டுது, பின்ன போனா தட்டுது. சினிமான்னா அப்படிதான்னு சும்மாவும் இருக்க முடியுதா? அவர் எங்கோ புலம்பியது எம் காதுக்கு வர, எம் காதுக்கு வந்தது அப்படியே உம்(ம) காதுகளுக்கும்….
Great information. Lucky me I discovered your blog by
chance (stumbleupon). I have saved it for later!