விஜய் – அஜீத்- வீடுகள் ஓரமாக விஜய் சேதுபதி?

இசைஞானி இளையராஜாவுக்கே ஈசிஆர் கடற்கரை ஓரமாக வீடு இருக்கிறது. அவருக்கே அப்படியென்றால் யூத் ஹீரோக்களுக்கு அந்த மயக்கம் இருக்காதா? பலரும் கிழக்கு கடற்கரை சாலையில் கடலோர காத்து வாங்க ஆசைப்படுகிறார்கள். விளைவு? கோடி கோடியாக கொட்டிக் கொடுத்து அங்கு வீடு வாங்க துடியாய் துடிக்கிறார்கள். சாலிகிராமத்திலிருந்த விஜய் சில வருஷங்களாக நீலாங்கரைக்கு போய்விட்டார். அவர் வீட்டிலிருந்து எட்டிப்பார்த்தால் கடல் தெரியும். அஜீத் வீடும் அவர் வீட்டுக்கு சமீபமாகதான் இருக்கிறது. கமல் வீட்டின் மாடியிலிருந்து கை நீட்டினால், ரெண்டு கடல் மீன்கள் அவர் கையில் விழுந்தாலும் ஆச்சர்யமில்லை. அப்படி கடற்கரை பிரியர்கள் லிஸ்ட்டில் மேலும் ஒரு முக்கியமான நடிகர் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவர்?

விஜய் சேதுபதி! தனது சில பட சம்பாத்யத்தில் ஈசிஆர் சாலையில் வீடு வாங்கியிருக்கிறார். வீட்டின் மதிப்பு சுமார் மூன்று கோடி என்கிறார்கள். நல்லவேளை… தனது சொந்தப்பட ஆசைகளை சற்றே மூட்டை கட்டி ஓரமாக வைத்துவிட்டு வீட்டின் மீது ஆசைப்பட்டார். வாங்குற நேரத்தில் வாங்கி சேர்க்கலைன்னா, வருத்தப்படுற வாலிபர் சங்கத்துல சேர வேண்டியதுதான்.

சாலிகிராமம் பகுதியில் பிரமாண்ட வீடு கட்டியிருக்கும் பரத்திற்கும் ஈசிஆர் மீது ஆசை வந்திருக்கிறதாம். இளைய தளபதி அங்கு இருக்கிறார். அதற்காகவே சின்ன தளபதியும் ஷிப்ட் ஆக ஆசைப்படுகிறாரோ என்னவோ?

Read previous post:
கார்த்தி பண்ணியது கரெக்டா? அருள்நிதி முறைத்தது ரைட்டா?

ஏக கடுப்பில் இருக்கிறார் அருள்நிதி. வம்சம், மவுன குரு, தகராறு என ஆடிக்கொரு படம், அமாவாசைக்கொரு படம் என்று தள்ளி தள்ளி வந்தாலும், சொல்லிக் கொள்ளும் நடிகர்கள்...

Close