இந்தியா தோற்றது நல்லதுதான்! தோழா கார்த்தி குறும்பு
‘நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி… எங்க படம் 25 வது நாள் வெற்றி… எங்க படம் 50 வது நாள் வெற்றி…’ என்று முரசு கொட்டி ஒலித்துக் கொண்டிருக்கும் பல ஹிட் பட அறிவிப்புகள், வெறும் சாயம் போன நீல சொக்கா என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெரியும். ரசிகர்களுக்கும் புரியும். இருந்தாலும், இந்த ஆர்ப்பாட்டமெல்லாம் இல்லை என்றால், நாளை என்பது பலருக்கும் கேள்விக்குறியாகி விடும் என்பதால்தான் இத்தகைய போலி அறிவிப்புகளும் பொரி உருண்டை சந்தோஷங்களும்.
இங்கு நிஜமாகவே சில படங்களுக்குதான் வெற்றி முழக்கம் சரியாக இருக்கும். அப்படியொரு படம் தோழா. நாகார்ஜுனா உட்கார்ந்து கொண்டே ஜெயித்த படம். கார்த்தியின் கலகலப்பு நிஜமாகவே வொர்க் அவுட் ஆன படமும் கூட. இந்த படத்தின் சக்சஸ் மீட்டுக்கு வந்த கார்த்தி, ரொம்ப நாள் கழிச்சு குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கிற மாதிரி ஒரு படம்னு பெண்கள் எல்லாம் கூட்டம் கூட்டமா தியேட்டருக்கு வர்றாங்க. உறவுகளின் அருமையை சொல்ற படம்னு பேஸ்புக்குலேயும் வாட்ஸ் ஆப்புலேயும் ரசிகர்களி பகிரிந்துக்குறாங்க. நாங்க கூட கிரிக்கெட் மேட்ச் வருதே… என்னாகுமோன்னு நினைச்சோம். இந்தியா தோற்றதும் ஒரு வகையில் நல்லதுதான். ஆர்வத்தை மூட்டை கட்டி வச்சுட்டு தியேட்டருக்கு வர்றாங்க ரசிகர்கள் என்றார். (கிரிக்கெட் ரசிகர்களின் டென்ஷனை அணைக்க, தீயணைப்பு வண்டிக்கு வேணா சொல்லட்டுங்களா…)
அப்படியே பேச்சு பார்ட் 2 பக்கம் திரும்பியது. தோழா படத்திற்கும் பார்ட் 2 உண்டா? அதுலயாவது நாகார்ஜுனா எழுந்து வந்து அனுஷ்காவுடன் டூயட் ஆடுவாரா என்றெல்லாம் கேள்விகள் பறக்க, பார்ட் 2 கண்டிப்பா உண்டு என்றபடி விடைகொடுத்தார்கள் படக்குழுவினர்.
வெயிட்டிங்…