மீண்டும் மீண்டும் புகழும் கார்த்தி மைம் கோபியும் மகத்தான தொண்டும்!

மெட்ராஸ் படத்தில் கார்த்தி யாரை வியந்தாரோ இல்லையோ? படத்தில் பங்காற்றிய மைம் கோபியை பற்றி அவர் பேசாத மேடையில்லை. பேசா நாடகம் மூலம் ஏராளமான கருத்துக்களை மக்களிடையே பேசி வருபவர்தான் இந்த மைம் கோபி. அப்படிப்பட்டவர் ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கிறார் என்றால் கார்த்தி வராமலிருப்பாரா? வந்து கலந்து கொண்டதோடு மீண்டும் ஒரு முறை கோபியை புகழும் மேடையாக்கிக் கொண்டார் அதை. யாரிந்த கோபி?

“G மைம்” ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குனர்தான் கோபி . மைம் கலையை உயிர் முச்சாக கொண்டு அக்கலையை வளரும் இளைய தலைமுறைக்கு கொண்டு சென்று அதில் வெற்றியையும் கண்டு வருபவர் .சினிமாவுக்குரிய நடிப்பு பயிற்ச்சியையும் கற்ப்பித்து வருபவர் .

தான் மட்டுமே சமுதாயத்தில் மேலோங்கி இருக்க வேண்டும் என்ற மனிதர்களுக்கு மத்தியில் ஆதரவற்ற ,நலிந்த ஊனமுற்ற குழந்தைகளுக்கு அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் கடந்த இரண்டு வருடமாக “மா ” என்ற நிகழ்ச்சியை நடத்தி இந்த தெய்வ குழ்ந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றார் . இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு துறைகளில் பணியாற்ற்றுபவர்கள் இக்குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் . பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது பிரத்யேகமாக” மா “என்ற நிகழ்ச்சி பார்வையாளர்களை கண் கலங்க வைத்தது , இயக்குனர் பிரபு சாலமன் , பாண்டிராஜ் , ரஞ்சித் ,பாலாஜி மோகன் , நடிகர் கார்த்தி, காளி , ஜான் விஜய் , அசோக் , கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . இவ்விழாவில் “அன்பு மலர் “இல்லத்தில் உள்ள 61 குழந்தைகளுக்கு ஒரு ஆண்டிற்கான கல்வித்தொகை வழங்கப்பட்டது ..

இக்குழந்தைகளுக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள

“ஜி “மைம் ஸ்டுடியோ
மைம் கோபி -09884032100
அஜித் – 09841236904
கோம்ஸ் -09884500004

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நானா கதை எழுதினேன்? என் பெயரை ஏன் சேர்க்கணும்? லிங்கா பிரச்சனையில் ரஜினி கேள்வி.

ஒருவழியாக கத்தி கதை பிரச்சனை ஓய்ந்துவிட்டது என்று நினைத்தால், அது ஐதராபாத்தில் மையம் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் ஒரு இணை இயக்குனர், கத்தி என்னுடைய கதை என்று அங்குள்ள...

Close