பிரச்சனையை பெருசு பண்ணி படத்தை ஓட வைக்க வேண்டாம்! கண்டத்திலிருந்து தப்புகிறார் கார்த்திக் சுப்புராஜ்?
எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்ல. எதிராளிக்கு இதயம் கிட்னின்னு எல்லாம் போகணும் என்று நினைக்கும் நல்லவர்கள் நிறைந்த பூமியல்லவா? பெரும் கூச்சலுடன் எழுந்த ஒரு பிரச்சனை, ஒரு சின்ன மியாவ் சவுண்டோடு முடிந்துவிடும் போலிருக்கிறது. இறைவி படத்தில் தயாரிப்பாளர் சமூகத்தை அவமதித்துவிட்டதாக அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மீது கடும் கோபமுற்றது தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு பிரிவு. உடனே பஞ்சாயத்தை கூட்டி ‘அந்த தம்பிக்கு நாலு சவுக்கடி கொடுக்கலேன்னா ரா சாப்பாடு கட்’ என்கிற அளவுக்கு கொதித்தவர்களை கூல் பண்ண வேண்டும் அல்லவா? உடனடியாக சனிக்கிழமை மாலையே ஸ்பெஷல் ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முடிவு?
அதற்குள் நன்கு ட்யூன் ஆகி வந்தார்களாம் சில தயாரிப்பாளர்கள். “ஏம்ப்பா… நமக்குதான் ஞானவேல்ராஜான்னாலே ஆகாதுல்ல? இந்த படத்தை தடை செய்யணும். கார்த்திக் சுப்புராஜுக்கு ரெட் போடணும்னு எதையாவது பேசி, அதுவும் நடந்துருச்சுன்னா இந்த படம் ஓடறதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி என்னதான்யா கேவலப்படுத்திட்டாருன்னு பார்க்கறதுக்குன்னே ஒரு கூட்டம் தியேட்டருக்கு வந்துடும். அதனால் சைலண்ட்டா விட்ருங்க. ஞானவேல்ராஜா நாசமா போகட்டும்” என்றார்களாம்.
“அப்படியெல்லாம் விடக்கூடாது. அதுக்கு நாங்க அனுமதிக்க மாட்டோம்” என்று முதலில் குரல் கொடுத்தவர்கள் மல்லுக்கு நிற்கிறார்கள். “குதிரைக்கு அரிச்சுதுன்னா குளம்பு வரைக்கும் குனிஞ்சு குனிஞ்சு சொறிஞ்சுவிடணும். இல்லேன்னா பொல்லாப்பு” என்று சமாதானம் பேசியிருக்கிறது இன்னொரு தரப்பு. எப்படியோ கடைசியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
இன்று இது தொடர்பாக ஒரு அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டியிருக்கிறார்கள். முடிவு மோர் பானையா? கூர் வாளா? என்பது இன்று இரவுக்குள் தெரிந்துவிடும்.
நமக்கு கிடைத்த தகவலின்படி, இந்த பிரச்சனை இன்றோடு ஜுஜுபி ஆகி, கார்த்திக் சுப்புராஜ் இதைவிட பலமாக அடுத்த படத்தில் காறி துப்புவார் என்று எதிர்பார்க்கலாம்.
இவர் எந்த இடத்திலும் மொத்த தயாரிபாலர்களும் இப்படி தான் என்று சொல்ல வில்லை . போலீஸ் , டாக்டர் , என பலப் பாத்திரங்கள் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் வருகிறார்கள்
மதுஅருந்தும் காட்சிகள் , புகைபிடிக்கும் காட்சிகள், பென்களை கேலிசெய்யும் காட்சிகளும் இரட்டை அர்த்த வசணங்களும் கண்டிக்காத” தயாரிப்பாளர்கள் கொதிப்பது தனக்கு வந்தால் தலைவலி மற்றவர்களுக்கு வந்தால் தலைமயிர்க்கு வலி என்ற போக்கை காட்டுகிறது.