கஸ்தூரியின் வாய் துடுக்கு! நடிகர் சங்கம் நோட்டீஸ்?

வர வர கஸ்தூரி, தன் வாய்ல நுரை தள்ற அளவுக்கு பேசி வருவதை பொதுமக்கள் கவனித்திருக்கலாம். இந்த திடீர் வியாதிக்கு மருந்து இருக்கிறதோ இல்லையோ? மண்டகப்படி மட்டும் நிச்சயம். ‘மாளிகை’ பட நிகழ்ச்சியில் கமல்ஹாசனை கிண்டல் செய்த கஸ்தூரி, தனது ட்விட்டர் பக்கத்தில் எம்.ஜி.ஆர் லதாவையும் விட்டு வைக்கவில்லை. “பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.ஜி.ஆர் லதாவை தடவுன மாதிரி இந்த தடவு தடவுறான்” என்று ஒரு ட்விட் போட்டிருந்தார்.

கிரிக்கெட் பிளேயர் பந்தை அடிக்காமல் கிரவுண்டை தடவுவதைதான் இவ்வாறு அழகு நடையும், மெழுகு தமிழுமாக(?) பதிவிட்டிருந்தார் அவர்.

எம்.ஜி.ஆர் ரசிகர்களில் பதவியில் இருக்கிற மந்திரிகளுக்கு இது எவ்வித சுரணை சூட்டையும் வரவழைக்கவில்லை என்பதுதான் பேரதிர்ச்சி. ஆனால் எம்.ஜி.ஆரின் நிஜமான ரசிகர்கள் கஸ்தூரியின் வாய்க்கு ஸ்பெஷல் பூட்டு ஆர்டர் பண்ணிவிட்டார்கள்.

இது ஒருபுறமிருக்க… அந்த ட்விட்டால் மனம் வெறுத்த நடிகை லதா, கஸ்தூரிக்கு தன் கண்டனத்தை தெரிவித்ததுடன் விஷயத்தை நடிகர் சங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு போயிருக்கிறார். இது தொடர்பாக லதா வெளியிட்ட அறிக்கை பின் வருமாறு-

எம்.ஜிஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

“ நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன். ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை. தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா..?

கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே..அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே..? எதுக்கு நானும், ‘மக்கள் திலகமும்’ நடிச்ச படத்தைச் சொல்லணும்..

அவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது… இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே.. இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா..ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படு்த்துற மாதிரி பேசலாமா..? கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி..

இதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து கண்டன கடிதம் அனுப்பி உள்ளதாக என்னிடம் சொன்னார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. அதுமட்டும் இல்லாமல் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களிலும் இருந்து கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். -இப்படிக்கு லதா.

Read previous post:
ரஜினி முதல்வர் ஆவாரா? திடுக்கிடும் ஜோதிடக் கணிப்பு!

https://www.youtube.com/watch?v=POUWVUJFZ3g

Close