குழந்தைகள் விரும்புது விஜய்யை! அதற்காக இவர் குழந்தையுமா?

இப்போதிருக்கும் ஹீரோக்களில் குழந்தைகள் மத்தியில் செல்வாக்கு யாருக்கு? இப்படியொரு போட்டி வைத்தால், மற்றவர்களையெல்லாம் தவிடு தின்ன வைத்துவிட்டு முதலிடத்தை பிடிப்பார் விஜய். அதற்கப்புறம் சிவகார்த்திகேயன்.

கபாலி வந்ததிலிருந்தே, சின்னக்குழந்தைகளும் “கபாலிடா…” என்று முழங்குவதால், அட ரஜினியும் ஆட்டத்தில் இருக்கிறார்.

எங்கோ தொலை தூரத்தில் விஜய்யையோ, சிவகார்த்திகேயனையோ, ரஜினியையோ ஸ்கிரீனில் மட்டும் பார்த்து என்ஜாய் பண்ணும் குழந்தைகளுக்கு வேண்டுமானால் இவர்களை தொட்டு நக்கி பார்க்கிற அளவுக்கு ஆர்வம் கொப்பளிக்கலாம். ஆனால் நினைத்தால் சந்திக்கிற தூரத்திலிருக்கிற குழந்தைகளுக்கும் கூட, விஜய்யை அளவுக்கு மீறி பிடிக்கிறதென்றால் இந்த கூத்தை எங்கு போய் சொல்வது?

அந்த குழந்தைகள் வேறு யாருமல்ல… டைரக்டர் முருகதாசின் குழந்தைகள்தான். இந்த வருடம் படிப்பில் முதலிடம் வந்தால், விஜய்யை நேரில் காட்டுகிறேன் என்றாராம் அவர். இந்த ஒரு வாக்குறுதிக்காக விழுந்து விழுந்து படித்த முருகதாஸ் பிள்ளைகள் இருவரும், நினைத்ததை முடித்துக் காட்டிவிட்டார்கள். அப்புறமென்ன? சொன்னது போல விஜய் வீட்டுக்கு அழைத்து சென்று அவருடன் விருந்து சாப்பிட வைத்தாராம் முருகதாஸ்.

ம்… கொடுத்து வைத்த குழந்தைகள்!

Read previous post:
Joker – 15 Sec Promo 4 | Releasing 12th August | Raju Murugan

Close