செருப்படி வாங்கிய செக்ஸ் படம்! கதவ மூடுது கோடம்பாக்கம்!
தமிழ்சினிமாவும் கலாச்சார அதிர்ச்சியும் என்று ஒரு தலைப்பு வைத்தால், லியோனியோ, நாஞ்சில் சம்பத்தோ நாக்கு சுளுக்குகிற அளவுக்கு பேசித் தள்ளுவார்கள். அந்தளவுக்கு கன்டென்ட் கொட்டிக் கிடக்கிறது இங்கே. திரைக்கு பின்னும் முன்னுமாக நிறைய சம்பவங்கள் இப்படி இருப்பதால் ஜனங்களும் அதற்கு பழகிவிடுவார்கள் என்கிற எண்ணத்திற்கு சரியான சவுக்கடி!
அண்மையில் வெளிவந்த 90 எம்.எல் படம் மண்ணை கவ்வி மல்லாக்கொட்டை தின்றுவிட்டது. அப்படத்தை தயாரித்த வகையில் அப்படத்தின் இயக்குனருக்கு சுமார் நாலரை கோடி நஷ்டமாம். அதை திருப்பி தருகிற அவஸ்தையும் வந்திருக்கிறது அவருக்கு.
90 எம்.எல் படம் ஓடாமல் போனதால் இதே டைப்பில் படம் எடுத்து குடத்தை நிரப்பலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த அத்தனை படைப்பாளிகளும் அவஸ்தைக்கு ஆளாகியிருக்கிறார்களாம். சிலர் பதிஞ்சு வச்ச டைட்டிலை அப்படியே விட்டுட்டு ஓடிட வேண்டியதுதான் என்கிற அளவுக்கு முடிவெடுத்திருப்பதுதான் ஆச்சர்யம்.
இத்தகைய குப்பைகளுக்கு இனிமேல் இடமில்லை. கோடம்பாக்கமே… கதவ சாத்து என்கிற முடிவுக்கு வந்த அத்தனை பேருக்கும் 90 எம்.எல் லை ஓட விடாத ஜனங்களின் சார்பில் ஒரு தம்ஸ் அப்!