உதவாமல் போன ஓவியா இமேஜ்! கவலைப்படும் ராகவா லாரன்ஸ்!
ஒரு பிளாஷ்பேக்… மைனா படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் அமலாபால். அதற்கு முன் அவர் நடித்த ஒரு படத்தின் பெயர் அவருக்கே மறந்து போயிருக்கும். இருந்தாலும் அமலாவின் கண்ணும், அந்த இன்னொசென்ட் முகமும் இந்த படத்தின் ரத்தம்… நாடி… நரம்பு… உயிர் என்று ரசித்து ரசித்து எடுத்துக் கொண்டிருந்தார் பிரபுசாலமன். பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருந்தது படம்.
அதற்கு நடுவில் ஒரு படம் கிடைக்க… அதில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் அமலாபால். அந்தப்படம்தான் ‘சிந்து சமவெளி’. மாமனாருக்கும் மருமகளுக்குமான கள்ள உறவை அலசுகிற படம். அப்படியே கதையின் கையை பிடித்துக் கொண்டு திரைக்குள்ளேயே போன மாதிரி ஜெல் ஆகியிருந்தார் அமலா. மைனாவுக்கு முன்பே திரைக்கு வந்துவிட்டது சிந்து சமவெளி. படத்தை பார்த்த பிரபுசாலமன் அப்படியே நெஞ்சை பிடித்துக் கொண்டு சாயாத குறைதான். அடிப்பாவி… உன்னைய குலதெய்வம் போல படைச்சேன். இப்படி பண்ணிட்டீயே என்று திட்டி தீர்த்தார். நல்லவேளை… மைனாவின் நேர்த்தி அமலாவின் சிந்து சமவெளி இமேஜையும் மீறி படத்தை ஓட வைத்தது.
இப்போது அமலா போட்ட அதே கல்லை எடுத்து ராகவா லாரன்ஸ் மீது போட்டுத் தள்ளியிருக்கிறார் ஓவியா. அவர் நடித்த 90 எம்.எல். படத்தை பார்த்த லாரன்ஸ், அடிப்பாவி… காஞ்சனா 3படத்தில் உனக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தேன். இப்படி பண்ணிட்டீயே என்று தலையில் கை வைத்துவிட்டாராம்.
மீண்டும் ரீ ஷூட்டிங்குக்கு பிளான் போட்டிருக்கிறார்கள்.
தங்க பிஸ்கட்டுனு நினைச்சா இப்படி தகர டப்பாவா இருக்குதுங்களே…?
lawrence pandi addiyachula? matter over.