கும்கி பார்ட் 2 லட்சுமிமேனனுக்கு கல்தா? அதி விரைவில் ஷுட்டிங்!
தொடரியில் இடறி குப்புற விழுந்த பிரபுசாலமன், அடுத்து உடனே உஷாராக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பாதி தூக்கத்தில் விழித்துக் கொண்டாலும், தொடரியை பற்றி நாலு வரி கழுவி ஊற்றிவிட்டு மீண்டும் குப்புற படுத்துக் கொள்கிற அளவுக்கு படு மோச பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் பிரபு சாலமனின் ட்விட்டர் ரசிகர்கள். இந்த நிலையில்தான் கும்கி பார்ட் 2 என்கிற முதலுதவி பெட்டியை ஓப்பன் பண்ணியிருக்கிறார் மிஸ்டர் பி.சா!
தொடரி படத்திற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செலவுகள், அதிகப்படியாக எடுக்கப்பட்ட காட்சிகள் என எல்லாவற்றையும் கணக்கு பார்த்தால், இன்னொரு படத்தையும் சேர்த்து எடுத்திருக்கலாம் என்கிறார்கள். அப்படியொரு செலவாளியான பிரபுசாலமனை நம்பி, சிறுவாட்டு உண்டியலை கூட திறக்கிற துணிச்சல் வேறு தயாரிப்பாளர்களுக்கு வராது என்கிற நிலையில், தானே தன் பணத்தில் கோதாவில் குதிக்க கிளம்பிவிட்டார் பிரபு. (இப்ப மட்டும் செலவு பல மடங்கு குறையுமே?)
கும்கி பார்ட் 2 தான் அவரது புதிய திட்டம். அதே லொக்கேஷன், அதே விக்ரம் பிரபு, அதே தம்பி ராமய்யா, அதே டி.இமான் என்று காம்பினேஷனை ரிப்பீட் பண்ணிய அவர், லட்சுமிமேனன் விஷயத்தில் மட்டும் பேஸ்த் அடித்துப் போய்விட்டாராம். ‘க்யூட்டா ஒரு பொண்ணு வேணும். அது லட்சுமிமேனனாகவே இருந்தாலும் சந்தோஷம்’ என்று நம்பிக் கொண்டிருந்தவருக்கு, றெக்க படத்தின் சில காட்சிகள் காண்பிக்கப்பட, அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் விலக வெகு நேரம் பிடித்ததாம். இனி லட்சுமி மேனனை இளைக்க வைத்து படம் எடுப்பதற்கு கால அவகாசம் இல்லை என்பதால் அவருடைய சிஷ்யர்கள் நாலாபுறமும் வலை வீசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் ஷுட்டிங்கை இந்த மாத இறுதியிலேயே துவங்கிவிடுகிற அளவுக்கு படு ஃபாஸ்ட்டாக இருக்கிறார் பிரபு. கும்கி யானை ஆசிர்வாதத்தில் இழந்த பெருமையை மீட்டு எடுக்கட்டும்…!
To listen Audio click below:-
https://youtu.be/ovNbQMnkK28