விஜய் வேண்டாம்! விஷால் போதும்! நேரடி தமிழ் படத்திற்காக பிரபுதேவா முடிவு!

என்ன விட்ட குறை, தொட்ட குறையோ? எக்கச்சக்க சம்பளம் தரும் இந்தி பீல்டை விட்டு விட்டு தமிழில் குப்பை கொட்ட கிளம்பிவிட்டார் பிரபுதேவா! இவர் இயக்கிய போக்கிரி சரியான ஹிட்! அதற்கப்புறம் இந்த ஹிட் காம்பினேஷனை மீண்டும் கோர்த்து மாலை கட்ட முன்னணி தயாரிப்பாளர்கள் முயற்சித்த போதெல்லாம், “நேரம் வரட்டும்… பார்க்கலாம்” என்றே கூறி வந்தார் விஜய். அதற்கப்புறம் வந்த வில்லு படு பிளாப். பிறகென்ன? இந்த ஜோடி சேர்வதில் தயக்கம் நீடித்தது. ஆனால் மீண்டும் ஒரு தமிழ் படத்தை இயக்க பிரபுதேவாவுக்கு நேரம் வந்தாச்சு. பிரபுதேவாவுடன் சேர்வதற்கு விஜய்க்குதான் நேரம் வரவில்லை!

பிரபல கல்வித்தந்தை ஐசரி கணேஷ் தயாரிக்கும் ஒரு புதிய படத்தைதான் இயக்கப் போகிறார் மாஸ்டர். இதில் கார்த்தியும் விஷாலும் இணைந்து நடிக்கப் போகிறார்கள். படத்திற்கு கருப்பு ராஜா, வெள்ளை ராஜா என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். பிரபுதேவா அழைத்தால், விஜய் கால்ஷீட் தர எப்போதும் ரெடி என்கிற சூழலில்தான் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார் மாஸ்டர். ஏன்? அதற்கு வேறு யாரும் காரணமல்ல. பணம் போட்ட ஐசரி கணேஷ்தான் காரணமாம். “இந்தப்படத்தை நான் விஷாலுக்கு செய்யுற மரியாதையா நினைக்கிறேன். அதனால் நடிகர் சங்கத்தின் தூண்களான விஷாலும் கார்த்தியும் நடிக்கட்டும்” என்று கூறிவிட்டாராம். (இதற்கு முன் பிரபுதேவா விஷால் இணைந்த வெடி, நமுத்துப்போனது நினைவிருக்கலாம்)

இதற்கிடையில் நயன்தாரா உச்சத்திலிருக்கிற இதே பீல்டுக்குள் மறுபடியும் என்ட்ரி கொடுத்து அவர் போகிற இடத்திலெல்லாம் தன் பெயரையும் பேச வைக்க வேண்டும் என்று சூளுரைத்திருக்கிறார் பிரபுதேவா. அதனால் இன்னும் ஆறேழு வருஷங்களுக்கு இதே கோடம்பாக்கம் சந்து பொந்துகளில் மாஸ்டரின் நடமாட்டத்தை பார்க்க முடியும்!

ஆந்தையின் சிரிப்புக்கெல்லாம் அஞ்சி நடுங்குனா அதுக்குப் பேரு காடு இல்ல!

To listen Audio click below:-

Read previous post:
Thala Ajith Stepping Into Bollywood.

https://youtu.be/-B0ED9b7Vig

Close