சின்னத் திரையில் சினேகா! எல்லா புகழும் குஷ்புவுக்கே!
அரசியலில் கூட சினிமா இல்லாமல் போய்விடும். ஆனால் சினிமாக்காரர்களிடம் அரசியல் இல்லாமலிருக்காது. நடிகை ராதிகாவின் சாம்ராஜ்யத்தை சன் டி.வி யிலிருந்து அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது என்கிற நிலைமை, ஐயோ பாவம் அரசியலால் ஒழிந்தது. ஒரு காலத்தில் மட்டுமல்ல, அண்மைக்காலம் வரைக்கும் கூட, சன் தொலைக்காட்சியின் தரமிக்க படைப்புகளில் ஒன்றாக விளங்கியது ராடன் டி.வி யின் சீரியல்கள். யாரை விட்டுக் கொடுத்தாலும் கொடுப்போம். ராடன் விஷயத்தில் நோ காம்ப்ரமைஸ் என்றுதான் இருந்தது சன். ஆனால் காலம் எல்லாவற்றையும் மாற்றி உருட்டி விளையாடிக் கொண்டே இருக்கிறதல்லவா?
இப்போது ராதிகாவுக்கும் சன் டி.விக்குமான பந்தம், விரைவில் முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது. ராதிகா இடத்தை நிரப்ப வேண்டும் என்றால், அதற்கு சரியான நபர் யார். எப்படி எப்படியோ யோசித்தவர்களுக்கு, லட்டு மாதிரி கையில் வந்து உட்கார்ந்தவர் குஷ்புதான். விதவிதமான நிகழ்ச்சிகளால் சன்னுக்கு துணை நிற்க சபதம் போட்டுவிட்டாராம் குஷ்பு.
அவரது முதல் டச்சே அமர்க்களம். கல்யாணம் ஆன நாளில் இருந்தே, சீரியலுக்கு வந்துருங்க என்று சினேகாவை நச்சரித்து வந்த சினிமாக்காரர்களுக்கு, நோ நோ என்று கூறிவந்த சினேகா, குஷ்பு அழைத்ததும் “சரிக்கா…” என்று கூறிவிட்டாராம். விரைவில் இந்த அறிவிப்பு முறைப்படி வரலாம்.
இதற்கிடையில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார் அல்லவா? அதிலும் ஒரு முக்கியமான ரோல் சினேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தப்படம் திரைக்கு வருவதற்குள், சினேகா சின்னத்திரையில் எத்தனை எபிசோட்டுகளை தாண்டியிருப்பாரோ?
சன் தொலைக்காட்சியின் தரமிக்க படைப்புகளில் ஒன்றாக விளங்கியது.
ஐயா இது உங்களுக்கே நியாயமா. “தரமிக்க”