அஜீத் சார் சொல்லியிருந்தா நல்லாதான் இருந்திருக்கும்! ஷாக் கொடுக்கிறார் லட்சுமிமேனன்

அஜீத் பற்றி பேசினால் ஆளுக்கொரு சம்பவம் வைத்திருப்பார்கள். பெரும்பாலும் அது அவரது எளிமை பற்றியும், ‘‘எடுத்துக்கோ” என்று கொடுத்தது பற்றியுமாகதான் இருக்கும்! நாலு பேருக்கு செய்யறது நமக்கு மட்டும் தெரிஞ்சா போதும் என்று இருப்பவர் அவர். அப்படியிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வருகிற தகவல்கள் பல, அவரது கிரீடத்தில் மேலும் மேலும் சிறகுகளை சொருகிக் கொண்டேயிருக்கும். ஆனால் முதன் முறையாக ஒரு விஷயத்தை லட்சுமிமேனன் மறுத்திருக்கிறார். ஆனாலும் தலைபோகிற சறுக்கல் இல்லை அது.

வேதாளம் படத்தில் அஜீத்தின் தங்கையாக நடித்த லட்சுமிமேனன், அப்படி நடிக்கும் போது அதன் முக்கியத்துவத்தை அறிந்திருப்பாரா தெரியாது. ஆனால் படம் வந்த பின், “வாம்மா தங்கச்சி” என்று கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள். பாசமலருக்கு அப்பால, முள்ளும் மலரும் வந்தது. முள்ளும் மலருமுக்கு அப்பால வேதாளம்தான் என்கிற அளவுக்கு தங்கச்சி சென்ட்டிமென்ட் தாறுமாறாக கொப்பளித்த படம் அது. படத்தின் முதல் பிரதியை பார்த்த அஜீத், லட்சுமிமேனனுக்கு பேசியதை விட ஐந்து லட்சம் எக்ஸ்ட்ரா கொடுக்கச் சொன்னதாக ஒரு தகவல் வந்தது அப்போது.

அது பற்றிதான் சமீபத்தில் சென்னை வந்த லட்சுமிமேனனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “ஆமாம்… நானும் அந்த செய்தியை படிச்சேன். அஜீத் சார் சொல்லியிருந்தா நல்லாயிருந்துருக்கும். ஆனா அவர் சொன்னாரான்னு தெரியல. எனக்கு யாரும் பணம் கொடுக்கலையே?” என்றார் லட்சுமிமேனன்.

டெலிவரியில கைய வச்ச மவராசன் யாருப்பா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எந்த தியேட்டர்ல என்ன படம் ஓடுது…? (12-02-2016)

Close