சிம்புவா? விஷாலா? லிங்குசாமி க்ளீன் முடிவு!
‘கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே…’ என்பார்கள். லிங்குசாமியும் அப்படிப்பட்ட ஒருவர்தான் என்றால், ‘ஆமாங்க ஆமாம்’ என்பார் கவுதம் மேனன்! லிங்குசாமியின் இப்போதைய நிலவரம், இத்துப்போன ஏடிஎம் கள் மாதிரி! ‘வெறும் மெஷின்தான்ங்க இருக்கு’ லெவல்! இவ்வளவு கெடுபிடியான நேரத்திலும், அவர் எப்பவோ கொடுத்த ஒரு கோடி ரூபாய் அட்வான்சை பெரிய மனசோடு கேட்காமல் விட்டிருக்கிறார். பொதுவாக சினிமாவில், “நேரம் வரட்டும்டா. கழுத்துல துண்டை போட்டு இறுக்குறேனா இல்லையா பார்” என்று காத்திருப்பார்கள். சம்பந்தப்பட்ட ஹீரோவின் படம் வருகிற நேரத்தில், குறுக்கே போய் படுத்துக் கொள்வார்கள். ‘என் ரூவாய எண்ணி வச்சுட்டு படத்தை ரிலீஸ் பண்ணிக்கோ’ என்பதாக இருக்கும் இவர்களின் பிடிவாதம்.
அச்சம் என்பது மடமையடா திரைக்கும் வரும் நேரத்தில் கவுதம் மேனனுக்கு நாலாபுறத்திலும் டிராபிக் ஜாம். அவ்வளவு கடன்கார கூட்டத்திலும் லிங்குசாமியின் தலை தென்படவில்லை. மாறாக கவுதமுக்கு போன் அடித்த லிங்கு, “நான் உங்களை டிஸ்ட்ரப் பண்ண மாட்டேன். எனக்கும் கஷ்டம்தான். இருந்தாலும் ரிலீஸ் நேரத்துல தயாரிப்பாளரும் டைரக்டரும் படுற கஷ்டம் எனக்கு தெரியும்” என்று கூறிவிட, எப்படியோ வெளியானது அச்சம் என்பது மடமையடா.
ரைட்… இப்போ விஷயம் என்ன? இந்த ஒரு கோடி அட்வான்சுக்கு சிம்புவை வைத்து அவர் படம் இயக்கப் போவதாக தகவல் களை கட்டியது. ஆனால் லிங்குவிடம் கேட்டால், இப்போதைக்கு அப்படியொரு முயற்சி இல்லை என்று ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். “முதல்ல நானும் விஷாலும் இணையும் ‘சண்டக்கோழி’ படத்தின் பார்ட் 2 பற்றிதான் என்னுடைய முழு கவனமும் இருக்கும். ஜனவரியில் ஷுட்டிங் போறோம். அந்த படம் வெளியாகுற வரைக்கும் வேறு எண்ணங்களுக்கு வழியே இல்லை” என்று கூறிவிட்டார்.
அதிஷ்டம் விஷாலுக்கா, சிம்புவுக்கா என்பதை சண்டக்கோழி பார்ட் 2 வின் ரிசல்ட்தான் தெரிவிக்கணும்!
https://youtu.be/11V-0qyK_1c