விஜய் தொடர்ந்து இதுபோன்ற படங்களை தர வேண்டும்! புலியை பாராட்டிய இயக்குனர் லிங்குசாமி

இளையதளபதி விஜய்யின் நடிப்பில் நேற்று வெளியான “புலி” படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்த இயக்குனர் லிங்குசாமி இளையதளபதி விஜய்யையும், இயக்குனர் சிம்புதேவனையும் மற்றும் படக்குழுவினரையும், வெகுவாக பாராட்டியுள்ளார்.

இன்று காலை புலி படத்தை பொதுமக்களுடன் இணைந்து திரையரங்கில் கண்டு ரசித்த லிங்குசாமி உடனடியாக இயக்குனர் சிம்புதேவனையும், படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவரான பி.டி.செல்வகுமாரையும் போனில் தொடர்பு கொண்டு, குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கியதற்காக பாராட்டியுள்ளார். மேலும், இளையதளபதி விஜய் தன்னுடைய ரசிகர்களை மட்டும் திருப்திபடுத்தும் வகையிலான படங்களை தேர்வு செய்யாமல், இதுபோன்று குழந்தைகளும் பார்த்து ரசிக்கும் வகையில் தொடர்ந்து படங்களை கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

படம் வெளியான முதல் காட்சியிலிருந்தே இப்படத்தை காண குழந்தைகள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் குடும்பம் குடும்பமாக புலி படத்தை பார்த்து வருகின்றனர் பொதுமக்கள்.

1 Comment
  1. Karthick says

    Puli Utter Mega Flop Movie. Don’t see Puli

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
புலி படத்தில் ஸ்ருதிஹாசன் படிக்கப் போனது ஏன்? படுபயங்கர சுவாரஸ்யமான தகவல்!

மனதில் நினைப்பதையெல்லாம் எடுத்துத் தொலைக்கிற டைரக்டர்கள் ஒரு டைப்! மனதில் நினைத்ததை கூட எடுக்க முடியாமல் கையை பிசைந்து நிற்கிற டைரக்டர்கள் இன்னொரு டைப். இதை படித்தபின்...

Close