புலி படத்தில் ஸ்ருதிஹாசன் படிக்கப் போனது ஏன்? படுபயங்கர சுவாரஸ்யமான தகவல்!

மனதில் நினைப்பதையெல்லாம் எடுத்துத் தொலைக்கிற டைரக்டர்கள் ஒரு டைப்! மனதில் நினைத்ததை கூட எடுக்க முடியாமல் கையை பிசைந்து நிற்கிற டைரக்டர்கள் இன்னொரு டைப். இதை படித்தபின் இது எந்த வகையான டைப் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.

புலி படத்தில் வரும் காட்சி இது. நான் மகளை வெளியூருக்கு படிக்க அனுப்புறேன் என்பார் நரேன். 500 வருஷங்களுக்கு முந்தைய கதையில் மகளை என்ன அண்ணாமலை யுனிவர்சிடிக்கா படிக்க அனுப்ப முடியும்? அவரும் படித்து முடித்துவிட்டு ஊர் திரும்பினால், அந்த ஊரிலிருக்கும் ஆட்களின் காஸ்ட்யூம்களுக்கும் ஸ்ருதி போட்டிருக்கும் காஸ்ட்யூம்களுக்கும் சம்பந்தமே இருக்காது. ஒரு காட்டுவாசி பெண் இப்படியா இருப்பாள் என்று ரசிகர்கள் க்ளுக்கென சிரித்துவிட்டு வேறொரு விஷயத்தில் மனசை லயிக்க விட்டாலும், நிஜத்தில் நடந்ததை அறிந்தால் அட பூமருங்களா…? என்று கவலைப்படவே செய்வார்கள்.

புலி ஷுட்டிங் துவங்கியதும் முதலில் கிடைத்தது ஹன்சிகா கால்ஷீட்தான். அதற்கப்புறம் பல நாட்கள் கழித்துதான் ஸ்ருதி நடிக்க வந்தார். தனக்கு முன்பாக நடித்த ஹன்சிகாவின் ஸ்டில்களை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். பட்டவர் கண்களுக்கு பந்தி விரித்திருக்கிறார்கள் அத்தனை ஸ்டில்களையும். ஹன்சிகாவுக்கு இளவரசி கெட்டல்ல டிரஸ். நான் காட்டுவாசி பொண்ணு மாதிரி (மாதிரியென்ன, பொண்ணேதான்) இலை, கொடியையெல்லாம் கட்டிகிட்டு நிக்கிற மாதிரி டிரஸ் போடணுமா? முடியவே முடியாது என்று கூறிவிட்டாராம். அதற்கப்புறம் வேறு வழியில்லாமல், என் பொண்ணு படிக்கப் போறா என்றொரு டயலாக்கை நடுவில் போட்டு, ஸ்ருதியை நவ நாகரீக நங்கையாக்கிவிட்டார் சிம்புதேவன்.

இப்படி நூலறுந்த பட்டத்துக்கு காரணமான நுனி பிளேடு யாரு கையிலெல்லாம் இருந்திருக்கு பாருங்க?

Read previous post:
தயாரிப்பது அஜீத் படம்! உதவியது விஜய் படத்திற்கு!

ஊர் கூடி தேர் இழுக்காமல் ஒரு இஞ்ச் கூட நகர்வதில்லை சில விஷயங்கள். என்னதான் விஜய் என்ற மாபெரும் இறக்கை இருந்தாலும், திடீரென தேங்கி நின்றது புலி....

Close