ஷங்கருடன் லிங்குசாமி சந்திப்பு ரஜினி ஷங்கர் படம் திருப்பதி பிரதர்ஸ்சுக்கா? lingusamy-shankar-meeting
ரஜினியின் அடுத்த படம் என்ன? ஷங்கரின் அடுத்த படம் என்ன? இவ்விரண்டு கேள்விகளையும் விடாமல் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் அதற்கு விடை கிடைத்தால்தானே? நடுவில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் இவ்விருவரையும் வைத்து படம் தயாரிக்க விரும்பியதாகவும் ஆனால் பட்ஜெட் பல கோடிகளை எட்டியதால் அந்த முயற்சியிலிருந்து பின்வாங்கிவிட்டதாகவும் ஒரு தகவல்.
இந்த நிலையில்தான் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான லிங்குசாமியும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். இந்த சந்திப்புக்குதான் பல்வேறு அர்த்தங்களை கற்பித்து ஆவலோடு காத்திருக்கிறது திரையுலகம். பொதுவாக லிங்குசாமியின் எண்ணம் பெரிதினும் பெரிது கேள் என்பதாகதான் இருக்கிறது. இல்லையென்றால் கமல் மாதிரி பெரிய கலைஞரை வைத்து படம் தயாரிக்க முடியுமா என்ன? கமல் என்பவர் தமிழ்சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். அவரையே வைத்து படம் தயாரித்துவிட்டார் லிங்குசாமி. அதற்கு அடுத்த இலக்கிலிருப்பவர் ரஜினிதானே?
அதனால் அதையும் ஒரு கை பார்த்துவிடுவது என்று தீர்மானித்துவிட்டாரோ என்னவோ? இருந்தாலும் இந்த சந்திப்பை இருவரும் ரகசியமாக வைத்திருந்தாலும், எவ்வளவு நாளைக்கு மூடி வைத்திருக்க முடியும்? உலகத்துக்கு நம்ம வாயால சொல்லியாச்சு. உண்மையில் நடப்பது என்ன என்பதை அவர்கள் இருவரும்தான் சொல்லவேண்டும்!
Comments are closed.