விட்றாதே… வெட்றா! ‘அந்த ’ உறுப்பை அறுக்கும் க்ளைமாக்ஸ்?
சதாசிவம் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியிருக்கும் படம் ரு. அதென்ன ரு? தூய தமிழில் ரு என்றால் ஐந்து என்று பொருளாம். இந்த ஐந்தாம் எண் படத்தில் என்னவாக வந்து ரோல் செய்யப் போகிறதோ, தெரியாது. ஆனால் படத்தின் கதையும் முடிவும் ‘வச்சாண்டா வெடிகுண்டு’ என்பதை போலவே இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். ஏன்? படத்தின் மெயின் லைன் என்ன என்பதைதான் அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்த டைரக்டர் பேரரசு சொல்லிவிட்டாரே? இந்த படத்தில் சினிமா டைரக்டராகவே நடித்தும் இருக்கிறார் பேரரசு.
சமுதாயத்தில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை எப்படிபட்டதாக இருக்க வேண்டும் என்கிற தீர்மானம் ஒவ்வொரு இந்திய குடிமகனின் மனசுக்குள்ளும் இருக்கிறது. ‘பேசாம சம்பந்தப்பட்ட ஏரியாவை வெட்டித்தள்ளாம என்னய்யா கோர்ட்டு கீர்ட்டுன்னுகிட்டு?’ இப்படி சொல்லாத நபர்கள் கொஞ்சம்தான். அநேகமாக படத்தின் க்ளைமாக்சும் அப்படிதான் இருக்கும் போலிருக்கிறது.
சின்னத்திரை புகழ் இர்பான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரக்ஷிதா நடித்திருக்கிறார்.
விழாவில் பேசிய எல்லாருமே இந்த படம் ஒரு துணிச்சலான முயற்சி என்று குறிப்பிட்டார்கள். துணிய அவுத்து துன்பம் கொடுக்கணும்னு நினைக்கிற அம்புட்டு பயலுகளுக்கும் இந்த துணிச்சல் முயற்சி புத்திய தெளிய வச்சா நல்லதுதான்.