மெர்சல் திண்டாட்டம்! லைக்கா கொண்டாட்டம்! முடிவு மட்டும் புஸ்….!
ஒருவருடைய திண்டாட்டம், இன்னொருவருக்கு கொண்டாட்டமாக அமைந்தால்… சத்தியமாக அந்த இடம் சினிமாதான்! கடந்த இரண்டு மூன்று நாட்களாக விஜய் அண் கோ பட்ட அத்தனை வலிகளையும், அனுபவித்து ரசித்தபடியே தன் படத்தை பாலீஷ் போட்ட ஒரு இயக்குனரும், தயாரிப்பு நிறுவனமும், மெர்சல் பஞ்சாயத்து முடிந்ததால் படு சோகத்திற்கு ஆளான கதைதான் இது.
‘இப்படை வெல்லும்’ என்ற படத்தில் நடித்து வந்த உதயநிதி, அந்தப்படத்தின் ரிலீஸ் விவகாரங்களில் மூக்கை நுழைக்கவில்லை. ஏனென்றால் அதை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா பார்த்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கை, இன்னொருவரின் துயரத்தின் மீது சவாரி செய்யவும் துணியும் என்ற உண்மை அவருக்கு தெரியுமா, தெரியாதா? அதுதான் டவுட்.
மெர்சல் படம் எப்படியாவது அரசியல் சூழ்ச்சியில் சிக்கி தீபாவளிக்கு வராது என்ற நம்பிக்கைக்கு வந்துவிட்டதாம் ‘இப்படை வெல்லும்’ பட நிறுவனமான லைக்கா. இதே விஜய்யை வைத்துதான் கத்தி என்ற படத்தை தயாரித்தோம் என்கிற நன்றி துளியும் இன்றி, மெர்சல் படத்திற்காக காத்திருந்த தியேட்டர்களில் இப்படை வெல்லும் படத்தை இறக்குவதற்கான வேலையை நேற்று இரவிலிருந்தே ஆரம்பித்துவிட்டார்களாம்.
திடீர் அறிவிப்பை கொடுத்துவிட்டு திரைக்கு வர திட்டமிட்ட அவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையவில்லை. வொய்? பிற்பகலில் இருந்தே நிலைமை சுமூகமாக தொடங்கிவிட்டது. சில கட்டுகள் கொடுத்து மெர்சல் படத்தை வெளியிட தடையில்லை என்று கூறிவிட்டது விலங்குகள் நல வாரியம்.
இந்த தீபாவளிக்கு சர வெடி வெடிச்சுடலாம் என்று நம்பிய நிறுவனம், இப்போது புஸ்ஸ்ஸ்…ஸ்வாணமாகிப் போனதுதான் சோகம்.