விஷாலை வியக்கும் எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ்!

நடிகர் விஷாலின் ..குணம்.. மனம்..காரம்

நடிகர் என்பதிற்கும் அப்பால் , தன், சிந்தை செயல், முயற்சி, உழைப்பு , பொருளாதாரம், நேரம்…என அத்தனையையும் —

சொந்த சுகம், வணிகம் என வளர்ப்பதிற்கு பதில்–

தீயவைகளை. கண்டு தீயாய். வெகுண்டு சமூக அக்கறையுடன் செயல்படும் நடிகர் விஷால் மேல் அபிமானம் எழுந்திருப்பது உண்மை.

மீடியாவில் வரவேண்டும் என்பதிற்காக அலையும் அரசியல் வியாதிகளுக்கு மத்தியில், போலி இல்லா தொண்டு இவருடையது.

அவரை சந்திக்க வேண்டும் என்கிற விருப்பம் இப்போது நிறைவேறிற்று. நண்பரும் டைரக்டருமான கசாலி ,அவரிடம் time fix செய்து, சண்டை கோழி 2 படபிடிப்பில் சந்தித்தோம்.

ஏர்போர்ட்டுக்கு எதிரே பின்னி மில்!

நாம் சினிமாவில் பார்க்கும் கிராமம், திருவிழா..சண்டையில் உடைக்கப்படுகிற தள்ளு வண்டி கடைகள், ராட்டினம், சட்டிப்பானை,…இத்யாதி..

–அட, விஷயதிற்கு வருவோம்.

இவரது இந்த சொந்த படத்திற்கு யூனிட் காத்திருக்க, இவர் தயாரிப்பாளர்- தியேட்டர் பிரச்னைக்காக அங்கேயே மீட்டிங்கில்!

முதலில் பொது காரியம்அப்புறம் தான் ஷூட்டிங்!

வந்ததுமே..”சாரி ..காக்க வச்சுட்டேனா..இதோ வந்துட்டேன்..என காமிராவுக்கு ஓடி கிடைத்த கேப்பில். வந்து..இனிமையான பேச்சு. அவரது பொது நல அக்கரைக்கு வாழ்த்து சொல்ல…இயல்பாக எடுத்துக்கொண்டு, இந்த பக்கம் விசாரித்தார்.

எழுத்து, மற்றும்குவைத் Indian Frontliners மூலம் தொண்டு …அறிந்து மகிழ்ந்தார்.

அவரது சமீபத்திய துப்பறிவாளன்..முதற்கொண்டு பல விஷயங்களை மனம் திறந்து , வெத்து பூச்சு இல்லாமல் கலந்துக்கொண்டது..நெகிழ்ச்சி.!

ஷாட் ரெடி என்பதை அறிந்து நாங்களாக கிளம்பும் வரை அவரிடம் புன்னகை மாரா விருந்தோம்பல்! போலி பகட்டில்லா விஷால் …அரசியலுக்கு…

–அட..வந்தால் நல்லது தான்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
17 ந் தேதி காலையில்தான் தணிக்கை சான்றிதழ்! கண்டத்திலிருந்து தப்பிய மெர்சல்!

Close