மரியாதைக்குரிய(?) மன்சூருக்கு ஜெயிலில் அது கிடைக்குதா?
வாண்ட்டட் ஆக வந்து வண்டியில் ஏறிக் கொண்ட மன்சூரலிகானால், பாரதிராஜா சீமான் தலைமையிலான கலை பண்பாட்டுக்குழுவுக்கு செம டென்ஷன். ‘அவரே போ சொல்லிட்டாரு. அப்புறம் ஏண்டா?’ என்று சீமானே கிளம்ப தயாராகிவிட்டார். வெளியே நின்று கொண்டிருந்த மன்சூரு அலிகான் சும்மாயில்லாமல், ‘ஏய்… முடிஞ்சா என் மேல கைய வச்சுப் பாரு. வச்சுதான் பாரேன்… ஹேய்… ஓய்…’ என்று சலம்பிக் கொண்டேயிருந்ததால், சீமானை விட்டுவிட்டு மன்சூரை அள்ளிக் கொண்டது போலீஸ்.
ஏனிப்படி ஒரு திடுக்கிடும் முடிவு? மன்சூருவின் பேச்சை லைவ்வாக ரிலே பண்ணிய சேனல்களின் ஆர்வம்தான். ஒரு பெரிய போலீஸ் அதிகாரி மன்சூருவின் பேச்சை லைவ்வாக பார்த்துக் கொண்டிருந்தாராம். அவரது உத்தரவின் பேரில்தான் அண்ணன் உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார்.
நான் உங்களுக்காக குரல் கொடுத்தேன். என்னை அம்போன்னு விட்டுட்டீங்களே…? என்று நாளை பழி போடுவாரே? இந்த கொடுமைக்கு அஞ்சி, மறுநாளே ஒரு கும்பலாக கிளம்பிப் போனார்கள் சீமான் மற்றும் பாரதிராஜா குழுவினர். ‘அந்தாளு ரொம்ப பேசுறான். வாய களட்டி குளிப்பாட்டி அனுப்புறோம். சில நாள் பொறுங்க’ என்றதாம் போலீஸ்.
மன்சூருவை சிறையிலிருந்து ஜாமீன் எடுக்க பலவாறான முயற்சிகள் நடந்து வருகின்றன. சிறைக்குள் இருக்கிற போலீஸ் கூட, இவர் கிராஸ் பண்ணும்போதெல்லாம் முறைக்கிறார்களாம்.
நாமதான் ஓவரா பேசிட்டமோ? என்று கன்பீஸ் ஆகிக்கிடக்கிறது வீரம் வௌஞ்ச மண்ணு!