நான் உங்கப்பாவின் ரசிகன்! சூர்யாவின் குழந்தைகளை குஷியாக்கிய தோனி!
எம்.எஸ்.தோனி அண்டோல்டு ஸ்டோரி திரைப்படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி. புயல் ஒன்று சத்யம் தியேட்டர் வளாகத்தில் லேண்ட் ஆனது போல ஒரே பரபரப்பு. அவரும் பிரமோஷனை முடித்துக் கொண்டு கிளம்பினோமா என்றில்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்ததும், நடிகர் சூர்யா பேமிலியை சந்தித்ததும் வரலாற்றில் ஒரு முக்கிய குறிப்பாகிவிட்டது.
முன்னதாக சத்யம் தியேட்டருக்கு தோனியை சந்திக்க வந்துவிட்டனர் சூர்யாவின் அன்புக்குழந்தைகள். இவர்கள் கேள்வி கேட்க, தோனி பதில் சொல்ல… ஒரே ஜாலியோ ஜாலியானது வந்திருந்த ரசிகர் கூட்டம்.
“உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?” என்று சூர்யாவின் மகள் கேட்டதற்கு தோனி சொன்ன பதில்தான் குழந்தைகளின் முகத்தில் கோடி லைட்டுகளை எரியவிட்டது.
நான் உங்கப்பா சூர்யாவின் ரசிகன். சூர்யா நடித்த ” சிங்கம் ” படத்தை நான் ஹிந்தியில் பார்த்து வியந்துபோனேன். என்ன ஒரு கம்பீரம்… என்றார்.
விளையாட்டு மைதானம் எனக்கு இரண்டாவது பள்ளி, பள்ளி எனக்கு இரண்டாவது வீடு, வீடு எனக்கு இரண்டாவது மைதானம். என்று அடுக்கடுக்காக அசர வைத்த தோனி கடைசியாக சொன்னதுதான் சூப்பர்.
“நான் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன் அவர் வழியை பின்பற்றுபவன் ” என்று கூறிவிட்டு, ரஜினி போலவே “என் வழி ,.தனி வழி” என்று தலையை கோதிக் கொண்டே சொல்ல, அந்த இடத்தில் கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆனது.
தமிழ்நாட்டுக்கு வந்தால், எதை சொன்னால் கை தட்டுவாங்க என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் தோனி.
To listen audio click below :-
https://www.youtube.com/watch?v=92vPTU2uEfw&feature=youtu.be