போட்டோ எடுத்தால் ஆள் குளோஸ்

எண்பதுகளில் போட்டோ என்பதே பலருக்கும் பெரும் கனவு. 2014 ல் அந்த நினைவுகளையும் ஏக்கங்களையும் மீட்டெடுத்திருக்கிறார் டைரக்டர் ராம். (இவர் வெறும் ராம். தங்க மீன்கள் ராம் அல்ல) படத்தின் பெயர் முண்டாசுப்பட்டி. யாரிடமும் உதவி இயக்குனராக வேலை பார்க்காத இவரை நம்பி எப்படியொரு படத்தை கொடுத்தார்கள்? அவர்தான் தனது கதையை குறும்படமாக எடுத்து நிரூபித்தவர் ஆச்சே?

அட்டக்கத்தி, சூதுகவ்வும் மாதிரியான அதிரி புதிரி ஹிட் படங்களை தயாரித்த சி.வி.குமார்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர். இந்த முறை இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார் குமார். முண்டாசுப்பட்டி குறும்படத்தில் ஹீரோவாக நடித்த காளி, இந்த படத்தில் பிரமாதமான ஒரு காமெடி ரோலில் நடிக்க, முழு ஹீரோவாக நடித்திருக்கிறார் விஷ்ணு. பொதுவாகவே விஷ்ணு படங்களில் ஒன்று படம் முழுக்க நம்மை அழ விடுவார். அதுவே நல்ல படமாக அமைந்தால், க்ளைமாக்சிலாவது அழ விட்டுவிடுவார். இந்த படம் அப்படியல்லவாம்.

நீங்க படம் ஆரம்பிச்சு முடியுற வரைக்கும் சிரிச்சிகிட்டேயிருக்கலாம். சுமார் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே எங்கிட்ட இந்த முண்டாசுப்பட்டி ஷார்ட் பிலிம் பற்றி சிலர் சொன்னப்போ, இந்த மாதிரி கதைகளில் நடிச்சா எவ்வளவு நல்லாயிருக்கும்னு நினைச்சிருக்கேன். அந்த படத்தை பார்த்துடணும்னு யூ ட்யூப்ல தேடினேன். பட்… கிடைக்கல. சில மாதங்களுக்கு முன் சி.வி.குமாரை ஒரு விழாவில் பார்த்து அவரது படங்களை பாராட்டிவிட்டு, இந்த மாதிரி வித்தியாசமான கதைன்னா நானும் நடிக்க தயாரா இருக்கேன்னு சொல்லிட்டு வந்தேன். அவர் அதை ஞாபகம் வச்சுருந்து என்னை அழைச்சார். இந்த குறும்படத்தை பார்க்க சொல்லி எனக்கு போட்டு காட்டினார். ஒரு வருஷத்துக்கு முன்னாடி நான் தேடிய விஷயம், சரியாக என்கிட்டயே வந்து சேர்ந்திருக்கிறது. சந்தோஷமா இருக்கு என்றார் விஷ்ணு.

அட்டக்கத்தி ஹீரோயின் நந்திதாதான் இந்த படத்திலும் நாயகி. ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயாரிக்கிற படத்துல நடிப்பேன்னு நான் கனவுல கூட நினைச்சதில்லை’ என்று சந்தோஷமானார். போட்டோ எடுத்தால் ஆள் குளோஸ் என்கிற சென்ட்டிமென்ட் நிறைந்த கிராமத்திற்குள் படமெடுக்க வந்த ஹீரோ என்ன பாடு படுகிறான் என்பதுதான் இந்த படத்தின் கதை. 80 களில் இது சகஜம். இப்பதான் செல்போன்லேயே கேமிராவெல்லாம் வந்துருச்சே, அதனால்தான் இதை பீரியட் பிலிமா எடுத்தோம் என்றார் படத்தின் இயக்குனர் ராம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உலகத்துல எங்காவது இப்படியெல்லாம் நடக்குமா?

மீண்டும் அந்த விஷயத்தை பற்றி எழுத வேண்டுமா என்று மனசு நினைத்தாலும், நல்லதை சொல்றதுக்கு எதுக்கு தயக்கம் என்கிற அடிப்படையில் மீண்டும் தொடருது அதே மேட்டர்! கடந்த...

Close