தமிழிலிருந்து சமந்தாவை ஓட ஓட விரட்டிய ஹீரோ?
இன்று சமந்தாவுக்கு பிறந்த நாள். இந்த இனிய நாளில் அவரை மொத்த தமிழ் பட ரசிகர்களும் வாழ்த்தி மகிழட்டும். ஆனால் தமிழில் அறிமுகமான சமந்தா, ஆந்திரா பக்கமாக ஒதுங்கியது ஏன்? அவரை தமிழ்நாட்டிலிருந்து விரட்டிய சக்தி எது? இப்படியெல்லாம் தோண்டி துருவி துளைத்தெடுத்து ஆராய்ந்தால் ஒரே ‘ஐயய்யோவாகிறது’ வந்து விழுகிற தகவல்கள். அதையெல்லாம் இந்த நேரத்தில் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம், அவரது பிறந்த நாள் கேக்கை இன்னும் கொஞ்சம் இனிப்பாக்கலாமே என்கிற நப்பாசைதான் நமக்கு.
சமீபத்தில் வெளிவந்த படங்களில் ஒரு படத்தை பற்றி மட்டும் தீர விசாரித்துக் கொண்டிருக்கிறாராம் சமந்தா. அந்த படம் தப்பி தவறிக் கூட ஓடிட கூடாது. நல்ல செய்தியா சொல்லுங்க என்று அவர் தனது சென்னை தோழிகளுக்கு போன் போட்டு வருகிறாராம். ஏன் இப்படியொரு கொலவெறி? அதுதான் யாருக்கும் புரியவில்லை. ஆனாலும் அந்த படத்தின் ஹீரோவுக்கும் சமந்தாவுக்கும் ஒரு விட்டகுறை தொட்ட குறை இருப்பதாகவே கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
‘பாணா காத்தாடி’தான் சமந்தா நடித்து வெளிவந்த முதல் தமிழ்ப்படம். அதற்கப்புறம் ‘மாஸ்கோவின் காவேரி’ வந்தது. ஆனால் அவர் முதலில் கமிட் ஆனது எந்த படத்தில் என்பதை பற்றியெல்லாம் இப்போது ஆராய்வது வேஸ்ட். இந்த படத்தில் அவருடன் நடித்த எந்த ஹீரோவுமே அப்போது சமந்தாவை நெருங்க முடியவில்லை. அதற்கு காரணம் வேறு சில பாதுகாப்புகள் இருந்தது அவருக்கு. ஆனால் அதற்கப்புறம் இவ்விரு படங்களுக்குமே சம்பந்தமில்லாத ஒரு கருப்பு ஹீரோ அவரை சீண்டினார். இத்தனைக்கும் இவர் நடித்த முதல் படம் ஹிட்! ஆனால் அதில் இவர் ஹீரோ அல்ல. இவரை போல இன்னும் நான்கு கில்லாடிகள் நடித்திருந்தார்கள். அதற்கப்புறம் ஒரே ஒரு படத்தில் தனி ஹீரோவாக நடித்தார் இவர். அந்த படம் ஒரு ஷோவுக்கு மேல் தாங்க வில்லை.
வசந்தம் வருமா என்று காத்துக் கொண்டிருக்கும் இந்த ஹீரோவின் தோல்வியை சமந்தா ஏன் ரசிக்க வேண்டும்? அவ்விருவருக்கும் இடையிலான வரப்பு வாய்க்கால் பிரச்சனை என்ன? யாராவது துப்பறியும் சாம்புவாக மாறி இதே வேலையாக திரிந்தால் இன்ட்ரஸ்டிங் தகவல்கள் கிடைக்கக் கூடும்.
செய்வீங்களா? செய்வீங்களா?
Who is this hero…
Unable to guess
vijay vasanth…????