கமல்ஹாசனின் நாயகன் படம் கூட காப்பிதான்! ஆவேச கூத்தாடிய மிஷ்கின்
நாட்டிய தாரகை ஸ்வர்ணமுகியை, தெரு முக்குல கரகாட்டம் ஆடக் கூப்பிட்டிருந்தால் கூட இவ்வளவு கோபப்பட்டிருப்பாரா தெரியாது. ஆனால் மகா கலைஞன், ஒரிஜனல் கதை உலகநாதன், ஓடாத படங்களின் ஒப்பிலா டைரக்டர் மிஷ்கினின் படங்களை விமர்சனம் செய்தால் மட்டும், ‘அட போக்கத்த விமர்சகனுங்களே.. வந்து படம் எடுத்து பாருங்கடா’ என்று சவால் விடுகிறார் அவர். ‘டேய் பேச்சை குறைக்கிறீயா இல்லையா?’ என்று பாலா கேட்டு முழுசாக பத்து நாட்கள் ஆகவில்லை. அதற்குள் ஒரு நிகழ்ச்சியில் மைக்கை பிடித்து பொழி பொழியென பொழிந்துவிட்டார் மிஷ்கின். அவரது ஒரே கேள்வி இதுதான். ‘ஏண்டா… நான் தமிழ்சினிமாவின் தரத்தை உலகப்படம் அளவுக்கு கொண்டு போக ஆசைப்படுறேன். அதை புரிஞ்சுக்காம அந்த படத்தின் காப்பி, இந்த படத்தின் காப்பின்னு எழுதுறீங்களே… நீங்கள்லாம் வௌங்குவீங்களா?’
கமலஹாசனின் ‘நாயகன்’ கூட காப்பிதான். அதுக்கு ஐந்து விருது கொடுத்தாங்களே, அப்பல்லாம் நீங்க எங்க போனீங்க? இது மிஷ்கினின் கேள்வி. இதே மிஷ்கின் கமலிடம் கதை சொல்லப் போனதும், இவர் சொன்ன அதே ஹாலிவுட் கதைகளை இவருக்கு முன் பார்த்துவிட்ட கமல், மிஷ்கினின் மூக்கை உடைத்து அனுப்பியதையும் இன்டஸ்ட்ரி நன்றாகவே அறியும்.
அந்த நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசியது தி இந்து இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு- டிக்கெட் வாங்கி படம் பார்த்தால் கூட இப்படியொரு என்டர்டெயின்மென்ட் உங்களுக்கு வாய்க்காது. கண்டு கழி… ஸாரி, களிங்க!
https://www.youtube.com/watch?v=5dyvjaO1lQg
https://www.youtube.com/watch?v=IwyauboFLhA
what is wrong in myshkin said. kamal has remade/copied every film that he made.But still he is called kalai gnani. Just because lot of middle aged men who became his fan’s in the 80’s didn’t have access to foreign movies and they are still thinking he is a good actor.
HI KK UNIVERSAL HERO IS THE BOSS OF CINEMA WORLD> MIND UR WORDS
kamal is true copy cat