த்ரிஷாவை நீக்கியது யாரு? அட… அதுதாண்டா ஷாக்!
கொல்லை கதவை பிசாசு தட்டுதேன்னு அஞ்சுற நேரத்தில், தெருக்கதவை தேவதை தட்டுன மாதிரி டேர்னிங் பாயின்ட்தான் இந்த நியூஸ். பிரபல தொழிலதிபர் வருண் மணியனுக்கும் த்ரிஷாவுக்கும் லவ் வந்து, அது நிச்சயதார்த்தம் வரை முன்னேறி, தமிழ் கூறும் நல்லுலகத்தின் முன்னணி செய்தியே இதுதான் என்றானதால், சக நடிகைகளுக்கு கொல வெறி. இந்த நேரத்தில், த்ரிஷா பற்றிய ஏகப்பட்ட நெகட்டிவ் செய்திகளை நாடெங்கிலும் பரப்பி வருகிறார்கள்.
அதில் ஒன்றுதான். என்.எச்.4 படத்தை இயக்கிய மணிமாறன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்த த்ரிஷா, அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்ற செய்தியும். இப்போது த்ரிஷாவுக்கு பதிலாக சுரபி நடிக்கப் போகிறார் என்று கூடுதல் தகவலையும் கொடுத்து கொண்டாட விட்டிருக்கிறார்கள். நிஜத்தில் நடந்ததை கேட்டால், ஹ்ய்யோ ஹய்யோ ஆவதை தவிர வேறு வழியில்லை. அந்த படத்தின் பினாமி தயாரிப்பாளரே வருண்மணியன்தானாம். பத்து நாட்கள் ஷுட்டிங்கும் முடிந்திருக்கிறது. இந்த நேரத்தில்தான் த்ரிஷாவுடன் லவ் வொர்க் அவுட் ஆனது அவருக்கு. பத்து நாள் படப்பிடிப்பு செலவு போனாலும் பரவாயில்லை. என் வருங்கால மனைவியை இந்த படத்திலிருந்து விலக்கி விட்ருங்க என்று உத்தரவு போட்டுவிட்டாராம். முதலாளியம்மாவுக்காக முதலாளி சொல்லும்போது கேட்காமலிருக்க முடியுமா? அதற்கப்புறம்தான் மணிமாறன் சுரபியை உள்ளே கொண்டு வந்திருக்கிறார். போகட்டும்… இன்னொரு சுவாரஸ்யமான தகவல் ஃப்ரம் ஆந்திரா.
ஜூப்ளிஹில்ஸ் பகுதியில் கடல் போல வீடு கட்டியிருக்கிறார் நடிகர் ராணா. இந்தியாவிலேயே பெரிய வீடு அம்பானி வீடுதான். இந்த வீடு அந்த வீட்டிற்கு சற்றும் குறைந்ததல்லவாம். முன்னாள் முதல்வரின் மகன் ஜெகன்மோகன்ரெட்டி வீட்டுக்கு நேர் எதிரில் அவரைவிட பெரிய பங்களாவில் குடியிருக்கும் ராணா, த்ரிஷாவின் நிச்சயதார்த்த செய்தி வெளியே வந்ததும் அந்த வீடு கொள்ளாத அளவுக்கு நண்பர்களை அழைத்து பெரிய பார்ட்டி கொடுத்தாராம். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதுக்காகதான் இந்த பார்ட்டி என்று அவர் சொன்னதுதான் ஏனென்றே புரியவில்லை பலருக்கும்.
அட நமக்கும்தான்!
முக்கிய செல்வ குறிப்பு- ராணாவுக்கு சற்றே இளைத்தவர்தான் இந்த வருண்மணியன். ராணா அளவுக்கு பணக்காரர் இல்லை என்றாலும், சொந்தமாக விமானம் வைத்திருக்கிற அளவுக்கு பணக்காரர் என்கிறார்கள்.