ஐம்பது மூட்டை ‘சரக்கு’ பாட்டில்! அலுத்துக்கொள்ளும் ஹீரோ

பவுர்ணமியில் பிடித்த நிலா கொழுக்கட்டை போலிருக்கிறார் யாமினி. ‘பப்பரப்பாம்’ படத்தின் செகன்ட் ஹீரோயின்! அவரை கொதிக்கும் கடற்கரை மணலில் கொந்தளிக்கும் வெயிலில் இறக்கிவிட்டிருந்தார் டைரக்டர் சசிகுமாரன். பொதுவா எந்த நடிகையும் இப்படி ஒரு மொட்டை வெயிலில் நிற்க மாட்டாங்க. நீங்க என்னடான்னா இப்படி வேர்த்து விறுவிறுக்க சமூக சேவை செய்யுறீங்களே…? என்று கேட்டால், ‘சார். நான் அப்பவுலேர்ந்தே அப்படிதான்’ என்றார் யாமினி. சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றி வரும் யாமினிக்கு சமூக சேவைன்னா ரொம்ப பிடிக்குமாம். பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியை சுத்தம் செய்ய கிளம்பியது ‘பப்பரப்பாம்’ படக்குழு. ‘நானும் வர்றேன்’ என்று முதலில் ஓடி வந்து வண்டியில் ஏறியவர் நம்ம யாமினிதானாம். (நீங்கள்லாம் நல்ல வருவீங்க)

இது நிஜமான சமூக சேவையா? இல்லை பிரஸ் கூடி போட்டோ எடுத்ததும் கிளம்பிருவீங்களா? என்ற கேள்வியோடு ஹீரோ வினோத்தை ஓரம் கட்டினோம். ‘நந்தா’ படத்தில் சின்ன வயசு சூர்யாவாக நடித்திருப்பவர் இந்த வினோத். அதற்கப்புறம் நிறைய படங்களில் வில்லன். நான் மகான் அல்ல படத்தில் இவர் கார்த்தியை கொலை வெறியோடு துரத்துவதை பார்த்தால், யாமினி உட்பட ஒரு பொண்ணும் கிட்ட நெருங்காது. பட்… வினோத் ரொம்பவே சாஃப்ட் போலிருக்கிறது. அங்கு குவிந்து கிடக்கும் ஏழெட்டு மூட்டைகளை காட்டினார். ‘எல்லாம் இங்க வர்ற சமூக விரோதிகள் குடிச்சுட்டு வீசுன குவார்ட்டர் ஆஃப் பாட்டில்கள் சார். (குடிக்கிறவங்கெல்லாம் சமூக விரோதிகளா, அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்) நாங்க காலையிலேர்ந்து பொறுக்கி எடுத்தது. இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள இன்னும் ஐம்பது மூட்டையாவது தேறும்’ என்றார்.

வேறு எந்த ஹீரோவும் நடிக்க தயங்குற ஒரு கேரக்டர்லதான் வினோத் நடிச்சுருக்கார். ஒரு பிணம் திடீர்னு உயிர்த்தெழுந்து தன் வாழ்க்கையை திரும்பி பார்ப்பதுதான் இந்த கதையின் ஒன்லைன். அதுக்கு மேல இப்போ வேணாம்னு நினைக்கிறேன் என்றார் டைரக்டர் சசிகுமாரன். சந்தோஷ்சிவனின் ‘உருமி’ படத்திற்கு இவர்தான் வசனகர்த்தா. அதுமட்டுமல்ல, பேசிக்கலா நான் ஒரு கேமிராமேன் என்கிறார் சசி. அதென்ன பப்பரப்பாம்னு ஒரு தலைப்பு. பளிச்சுனுன்னு கண்ணை உறுத்துர விஷயங்களை பப்பரப்பாம்னு இருக்குன்னு சொல்வாங்க. நான் இந்த படத்துல இந்த தலைப்பை எப்படி பொறுத்தமா சொல்றேன்னு படத்தை பார்த்தால்தான் புரியும் என்றார் சசி.

சதுரங்க வேட்டை ஹீரோயின் இஷாராதான் இந்த படத்தின் ஹீரோயினாம். கொஞ்சம் இன்டலெக்சுவல் கோஷ்டியாக தெரிகிறார்கள் எல்லாரும். என்னவோ சொல்ல வர்றாங்க. வெயிட் பண்ணுவோம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அங்க தொட்டு இங்க தொட்டு அஜீத் வரைக்கும் வந்திட்டாரு கானா பாலா!

‘நடுக்கடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா... ?’ இப்படியொரு புதுக்குரலாக கோடம்பாக்கத்தில் ஒலித்தபோது, ஒட்டுமொத்த சினிமாக்காரர்களும் ‘அமுக்குரா அவர...’ என்று கானா பாலாவை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள்....

Close