மிஷ்கின்- ராம் இணைந்து நடிக்கிறார்களாம்! ஆம்புலன்ஸ்சுக்கு போன் போடுங்கப்பா…
மைக் கிடைத்தால் போதும். மனசுல நினைக்கிறதை போட்டு உடைக்கிற விஷயத்தில் மிஷ்கினுக்கும் கற்றது தமிழ் ராமுக்கும் ஒரே தராசுதான்! அதற்கப்புறம் வலை தளங்களில் வாங்கிக் கட்டிக் கொள்வார்கள். அது தனி. அதுவும் மிஷ்கின் வாயை திறந்தால், ஏழெட்டு ரிக்டர் அளவில் பூகம்பம் தயார். உதாரணத்திற்கு ஒண்ணே ஒண்ணு. (ஒண்ணுதானா?) சித்திரம் பேசுதடி படம் பற்றி எங்கோ நடந்த கல்லூரி விழாவில் இவரிடம் கேள்வி கேட்கப்பட்டதாம். அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? அந்த படத்தின் மூலம் நான் அடைஞ்ச ஒரே லாபம், அந்த படத்தின் ஹீரோயினோட நாலைஞ்சு தடவ செக்ஸ் வச்சுக்கிட்டதுதான்!
இப்படியெல்லாம் வாய்க்கு வந்தபடி பேச அவரால்தான் முடியும். ராம் எப்படி? ‘ஊர்ல இருக்கிற என் ஒண்ணுவிட்ட மாமனுக்கு ஏன்யா விருது கொடுக்கலே?’ என்று மதிச்சு கூப்பிட்ட இடத்துல ஒரண்ட இழுக்கிற அளவுக்கு வெளிப்படை விரும்பி. இவர்கள் இருவரும்தான் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கப் போகிறார்களாம்.
மிஷ்கினின் உதவியாளர் ஒருவர் இயக்குகிற படம் அது. கூத்தையும் பாட்டையும் கூடவே இருந்து அனுபவித்த பிறகும் என்ன துணிச்சல்பா இவருக்கு!?
Marana kalaai. Kalakuringa sir article headings/titles la