திரும்பி வந்துருச்சுடா செல்ஃபி புள்ள!

ஆம்பள மாதிரி ஒரு பொண்ணு வேணும் என்று நினைக்கும் அத்தனை இயக்குனர்களும், அதை போல குரலும், அதைவிட அழகான திமிரும் கொண்ட வசுந்தராவை அணுகுவதில் வியப்பொன்றும் இல்லை. ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மட்டுமல்ல, அதற்கு முன்னால் வந்த ‘பேராண்மை’யும் கூட வசுந்தராவின் ஆண் திமிரை அழகாக எடுத்துச் சொன்ன படங்கள்தான்.

நடுவில்தான் அவர் செல்ஃபி பிரச்சனையில் சிக்கிக் கொண்டாரே? அதற்கப்புறம் சமூச வலைதள சண்டாள சிரிப்பாளர்கள் கொடியில் துணி காயப்போட பயன்படுத்தும் க்ளிப்புகளை கூட வசுந்தராவுடன் தொடர்பு படுத்தி அடித்த ரகளைகள் கொஞ்சமா நஞ்சமா? அந்த படத்துல இருக்கறது நான் இல்ல. நான் இல்ல. இல்லவே இல்ல… என்றெல்லாம் கதறி ஓய்ந்துவிட்டார் அவரும். அதற்கப்புறம் தன்னை தேடி வரும் சினிமா வாய்ப்புகளை கூட ஒப்புக் கொள்ளாமல் தள்ளி தள்ளிப் போன அவரை ஒரு புதுப்படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

கதைப்படி அவர் ஒரு புலனாய்வு நிருபராம். இந்த படத்தில் முக்கியமான ரோலில் கிஷோரும் நடிக்கப் போகிறார். ஒரு புலனாய்வு நிருபர் என்றால் எப்படி இருக்கணுமோ, அப்படியெல்லாம் தன்னை தயார் படுத்த கிளம்பியிருக்கிறார் வசுந்தரா. படத்துல அவர் செல்போனை பயன்படுத்தி சில க்ளிக்குகள் செய்வார். அதற்காக உலகம் பிழை பொருத்தருளணும்….!

Read previous post:
லாரன்ஸ் கெட்டப்! ரஜினி பாராட்டு!! தமிழகத்தை வியக்க வைக்கும் எழிலிருந்து எண்பது வரை!!!

இம்மாதம் 17 ந் தேதி திரைக்கு வருகிறது காஞ்சனா. சினிமா வியாபாரம் படு பாதாளத்தை நோக்கிச் செல்லும் இந்த ஆபத்தான சூழலிலும் கூட, பல வருடங்களுக்கு பிறகு...

Close