லாரன்ஸ் கெட்டப்! ரஜினி பாராட்டு!! தமிழகத்தை வியக்க வைக்கும் எழிலிருந்து எண்பது வரை!!!

இம்மாதம் 17 ந் தேதி திரைக்கு வருகிறது காஞ்சனா. சினிமா வியாபாரம் படு பாதாளத்தை நோக்கிச் செல்லும் இந்த ஆபத்தான சூழலிலும் கூட, பல வருடங்களுக்கு பிறகு மினிமம் கியாரண்டி அடிப்படையில் இந்த படத்தினை விநியோகஸ்தர்கள் வாங்கியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, படம் சுமார் 55 கோடிக்கு வியாபாரம் ஆகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகும் இப்படத்திற்காக இரு மாநிலங்களிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமயத்தில் ஒரு கிழவியாக வடிவம் எடுத்து தமிழகத்தையே தன் பக்கம் இழுத்திருந்தார் லாரன்ஸ். படத்தில் அது மட்டும்தான் விசேஷமா என்றால் அதுதான் இல்லை. ஏழு வயது சிறுவனாகவும் நடித்திருக்கிறாராம். அந்த லுக்கையும் வெளியிட்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தருகிறார்கள் காஞ்சனா குழுவினர்.

இந்த ஏழு வயசு லுக்கையும், எண்பது வயசு கிழவி லுக்கையும் போட்டோவில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி, லாரன்ஸ்சை நேரில் அழைத்து… தம்பி. நீ எங்கேயோ போயிட்ட ரேஞ்சில் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். லாரன்ஸ் ரஜினியின் வளர்ப்பு என்பதை இங்கே சொல்லியாக வேண்டுமா என்ன? லாரன்சின் எல்லா விஷயங்களையும் பாராட்டி வரும் ரஜினி, இந்த போட்டோக்களை பார்த்து நிஜமாகவே அசந்து போனாராம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
motion poster of InimeyIppadithan

https://youtu.be/B0MUYLWGjCk

Close