மிஸ்கின் பேச்சு! புஸ்சுன்னு போச்சு! அப்செட்டாக்கிய ஆடியோ விழா

மிஷ்கின் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால், ஒரு ரசிகர் கூட்டம் அதற்கு முன்பே அங்கு வந்து காத்திருக்கும். ஏன்? மனுஷன் ஏடாகூடமாக ஏதாவது பேசுவார். அந்த கண்ணாடியும் அந்த பாடி லாங்குவேஜும்… ‘அப்பப்பா’ என்று ரசிக்கும்படி இருக்கும்.

பிரபல நடிகை சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சீமத்துரை பட பாடல் வெளியீட்டு விழாவிலும் இந்த விஷயம் நடந்தது. விழாவுக்கு யார் யாரோ வந்திருந்தாலும் மிஷ்கினுக்காக காத்திருந்தது கூட்டம்.

அந்தோ பரிதாபம்… ஒருவரையும் சீண்டாமல், யாரையும் பிடுங்கி வைக்காமல் டீசன்ட்டாக பேசிவிட்டு போனார் மனுஷன். (கொஞ்சம் அப்செட்தாங்க) இருந்தாலும் இந்த விழாவுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம்? இந்த இயக்குனரை பற்றிய தன் பார்வை என்ன என்பது பற்றியெல்லாம் அவர் பேசியது இன்ட்ரஸ்ட்டிங்…

“பொதுவாக இசை வெளீயிட்டு விழா என்பது பொய்கள் நிறைந்ததாகவே இருக்கும். இது என் படங்களுக்கும் பொருந்தும். ஆனால் உண்மையிலேயே இங்கே இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் இங்கு வந்திருப்பவர்களின் பொய்யற்ற வெகுளித்தனம். விஜி சந்திரசேகர் இந்திய சினிமா குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கும் ஒரு நடிகை, நிச்சயம் அவர் வரும் நாளில் கொண்டாடப்படுவார். அவர் தோழமையோடு கண்டிப்பாக கேட்டுக்கொண்டதின் பெயரிலேயே நான் இங்கிருக்கிறேன். இயக்குநர் சந்தோஷ் என்னை சந்திக்க வந்திருந்த போது தான் அவரை முதன் முதலாகப் பார்த்தேன். பார்த்த மாத்திரத்திலேயே அவரது நம்பிக்கை மிகுந்த கண்களும், முகமும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அவரது நம்பிக்கையே “சீமத்துரை” நன்றாக இருக்கும் என உறுதிசெய்கிறது. தான் வாழ்ந்த மண் சார்ந்தே தனது முதல் படத்தை எடுத்துள்ள இயக்குநருக்கு வாழ்த்துகள். குறிப்பாக தனது முதல் படத்திலேயே இசை வெளியீட்டு விழாவில் “மேக்கிங்” காட்சிகளை ஒளிபரப்பிய நம்பிக்கை எனக்கு பிடித்திருந்தது. இதற்கு முன்னர் நான் மட்டும் தான் “சித்திரம் பேசுதடி” படம் வந்தபோது இதை செய்தேன். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் கீதன் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். அவரது முகம் எல்லோருக்குமே எளிதில் பதியும் விதத்தில் இருப்பது அவரது பலம், நிச்சயமாக உயரங்கள் தொடுவார். ட்ரைலரில் கருவாடு விற்பது போல காட்சிகள் இருந்தது, இந்த உலகத்தின் மிகமிக சுவையான உணவு கருவாடு தான். பழைய சோற்றுக்கும், கருவாட்டுக் குழம்பிற்கும் ஈடு இணையான உணவே கிடையாது. இங்கே மூன்று பாடல்களை ஒளிபரப்பினார்கள், நேரம் கருதி அதை குறைத்திருக்கலாம். ஆனால் அத்தனை பாடல்களையும் நம்மை பார்க்க வைத்தது கூட அவர்களது நம்பிக்கையை பிரதிபலித்தது. இந்த படத்தின் பாடல்களை பார்க்கும் போது அதில் ஒரு மிகையில்லாத ஒளிப்பதிவு நேர்த்தியை காண முடிந்தது. இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ரான்க்ளின் அழகான பாடல்களைக் கொடுத்திருக்கிறார்” என்று பேசி முடித்தார்.

சீமத்துரை தஞ்சை மண் சார்ந்த படமாம். மன்னார்க்குடியும் பக்கத்திலேயேதான்  இருக்கு. அப்ப சீமத்துரைன்னு டைட்டில் வச்சது கரெக்டுதான்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Karu – Official Trailer

https://www.youtube.com/watch?v=MDP_SdBI2wE&feature=youtu.be

Close