மதிக்காத விஜய்! பழி வாங்குகிறதா நடிகர் சங்கம்?
இதுதான் தமிழ்சினிமாவில் சாபக்கேடு. நாமதான் சூப்பர் ஸ்டார் என்று ஜெய், ஜீவா மாதிரி நடிகர்கள் கூட நினைத்துக் கொள்வார்கள். கண்ணை மூடுனா கலிபோர்னியாவில் டூயட் பாடுவது போல எல்லாமே இவர்களுக்கு ஈஸி. இந்த சூப்பர் ஸ்டார் ஆசை கூட! இவர்களுக்கு சம்பள பஞ்சாயத்து, கால்ஷீட் கலவரம் போன்றவற்றை சுலபமாக தீர்த்து வைக்கும் நடிகர் சங்கத்திற்கு வருவார்களா என்றால், சேச்சே… அங்கெல்லாம்… நானா… என்று மூக்கை சுளிப்பார்கள்.
இந்த சில் வண்டுகளே இப்படியென்றால் பெரும் போராட்டத்திற்கு பின் உருண்டு புரண்டு அந்த சூப்பர் ஸ்டார் இடத்திற்கு வந்த விஜய் அஜீத் மாதிரியான நடிகர்களுக்கும் அதே எண்ணம் தோன்றுவது இயல்புதான். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவுக்கு அஜீத் விஜய் இருவருமே வரவில்லை. நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவுக்கும் வரவில்லை.
ஆனால் பிரச்சனை இவர்களைதான் சூறாவளியாக சுற்றி சுற்றி அடிக்கிறது.
விஜய் அஜீத் படங்கள் வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு இம்சை ஏழரையை கூட்டிக் கொண்டு வருவது இன்று நேற்றல்ல. பல வருடங்களாக நடப்பவைதான். அப்படியிருந்தும் தனக்கு சப்போர்ட் பண்ணுகிற அமைப்புகளை ஃபார்மாலிடிக்குக் கூட சீந்துவதில்லை இவர்கள்.
அந்த பலனைதான் விஜய் அனுபவித்து வருகிறார் கடந்த சில தினங்களாக. மெர்சல் படத்தில் வரும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என பி.ஜே.பி யின் தமிழக தலைவர்கள் பலர் தங்கள் கொசுப் பல்லால் குதறி வருகிறார்கள். விஜய்யை கிறித்துவர், சுயநலக்காரர், ஒழுங்காக இன்கம்டாக்ஸ் கட்டாதவர் என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் இது குறித்து தனது எதிர்ப்பையோ, அல்லது வருத்தத்தையோ இதுவரை தெரிவிக்கவில்லை நடிகர் சங்கம்.
சிலரிடம் விசாரித்தால், “அவரு எங்களை மதிக்கல. நாங்க அவரை மதிக்கல…” என்கிறார்கள் சாதாரணமாக!
விஜய்யும் அஜீத்தும் யோசிக்க வேண்டிய நேரமிது!
https://youtu.be/wAMPkGu8D_c