அம்மாவுக்கு ஜே…! அ.தி.மு.க வில் இணைகிறார் நமீதா!
கடந்த சில வருஷங்களாகவே பொன்னாடைகளையும் பொதுக்கூட்டங்களையும் பற்றியே கனவில் களவாடி, நிஜத்தில் மனம் கூடிக் கிடந்த நமீதாவுக்கு அடிச்சுதுடா சான்ஸ்! யெஸ்… அவர் தன்னை அதிமுக வில் இணைத்துக் கொள்ளப் போகிறார். திருச்சியில் பிரசாரத்திற்கு வரும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அவர் இணைவார் என்கிறது தகவல்கள். ஆனால் அவரிடம் இருந்து இது சம்பந்தமான அறிவிப்பு ஏதும் இல்லை.
தகவலை உறுதிப்படுத்த இயலாவிட்டாலும், நமக்கு கிடைத்த தகவல்களின் படி இன்றிலிருந்து இரட்டை இலை சாப்பாடு நமீதாவுக்கு உர்ஜிதமாக்கப்பட்டுள்ளதாம். இந்த தேர்தலில் அவர் சூறாவளி பிரச்சாரம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாம்.
நமீதாவை வெகு காலமாகவே தேசியக் கட்சிகள்தான் நச்சரித்து வந்தனவாம். ஆனால் அவரது விருப்பம் அம்மா கட்சியில் சேர்வதாகதான் இருந்தது. தனது ஆசையை முறைப்படி தெரிவிக்கவே அவருக்கு இத்தனை காலம் பிடித்துவிட்டதாக கூறுகிறார்கள்.
முன்பெல்லாம் மேடை கொள்ளாத அளவுக்கு இருந்த நமீதா, இப்போது இளைத்து மெலிசாகிவிட்டதால் பந்தல் கான்ட்ராக்டர்களும் அவரது வருகையை இனிப்பு கொடுத்து கொண்டாடி வருகிறார்களாம். இனி பூமி கொள்ளாத கூட்டத்துக்கு நடுவே சாமி மாதிரி வந்து அருள்பாலிப்பார் நமீதா.
அருள் வந்து ஆடாமலிருக்கணும் திருவாளர் பொதுசனம்!