வெள்ளை மாளிகையை மிரள விடுவாரா நெப்ஸ்?
தன் மகனின் உடல் நலத்திற்காக கடந்த பல வருடங்களாக அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார் நடிகர் நெப்போலியன். இடுப்புக்கு மேலே ஏற்றிக் கட்டிய வேஷ்டியும், வெளியே தெரியும் பட்டா பட்டியுமாக நடித்துத் திரிந்தவர், கோட் சூட் போட்டு ஹாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்பது பிராப்தம் போலிருக்கிறது.
“டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். இன்னும் சில மாதங்களில் இந்தப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடப் போகிறார்கள். ‘என்னதான் அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டாலும், இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இங்குதான் வெளியிடணும்னு நினைச்சேன்’ என்றார் நெப்ஸ்.
உங்க பழைய படங்களை அமெரிக்காவுல டப் பண்ணி ரிலீஸ் பண்ணுங்களேன். வெள்ளை மாளிகை மிரளட்டும்…