அசைந்து கொடுக்காத மணிரத்னம்! சிம்பு ஹேப்பியோ ஹேப்பி!
நடிகர் சங்கத்திற்காக ஒரு சட்டையையும், தயாரிப்பாளர் சங்கத்திற்காக இன்னொரு சட்டையையும் போட்டுக் கொண்டாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார் விஷால். நல்லவேளையாக சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகாரை ஞானவேல் ராஜா, கதிரேசன் போன்ற வேறு பொறுப்பாளர்களிடம் தள்ளிவிட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டார் அவர்.
நடிகர் சங்கத்தில் கூட இந்த விஷயத்தை பொன் வண்ணனும் நாசரும்தான் கவனிக்கிறார்களாம். இங்குதான் சிம்புவின் குருப்பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும் சேர்ந்து கை கொடுத்திருக்கிறது.
மைக்கேல் ராயப்பனை டீலில் விட்டுவிட்டார்களாம். அறிவிக்கப்பட்ட சைலன்ட் தடை, காற்றோட போயாச்சு. மணிரத்னம் படத்தில் நடிப்பதற்கு எவ்வித தடையும் போடவில்லை நடிகர் சங்கம். தான் கொடுத்த வாக்கிலிருந்தும் பின்வாங்கவில்லை மணிரத்னம்.
இனிமேல் மணி சார் படம் வளர்வது சிம்புவின் ஒழுக்கத்திலிருக்கிறது.
ஒழுக்கம், வழுக்காமலிருந்தால் மணி சாருக்கு அடுத்த அட்டாக் வராது. இல்லேன்னா…?
சொல்லவே அச்சமாயிருக்கே?