நயன்தாராவை மிருகமாக சித்தரித்து ஒரு பாடல்! தொடரும் சிம்பு அட்ராசிட்டி!

அந்த ‘சர்ச்சைப்பாடலின்’ ஹீரோயின் நயன்தாராவா? ஹன்சிகாவா? என்பதுதான் இன்னும் புரியாத புதிர்! நல்லவேளையாக இப்போது வந்திருக்கும் இன்னொரு தகவல் மூலம் அது நயன்தாரா என்பதை அரசல் புரசலாக புரிந்து கொள்ள முடிகிறது.

வேறொன்றுமில்லை… சிம்பு நடித்து எப்பவோ(?) வெளிவரப்போகும் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடல் மட்டும் இன்னும் படமாக்கப்படவில்லை. அதில் நடிக்கவே முடியாது. உங்களால ஆனதை பாருங்க என்று கிளம்பிவிட்டார் நயன்தாரா. நடிகர் சங்கத்தில் புகார், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார், கொட்டாம்பட்டி தலையாரி சங்கத்தில் புகார் என்று நயன்தாராவுக்கு எதிராக நாலாபுறமும் வாள் சுழற்றிய சிம்பு அண் கோ தனது போராட்டத்தை ஒரு வழியாக நிறுத்திக் கொண்டது. ஏன் நயன்தாரா அதில் நடிக்க முடியாது என்று சொன்னார்?

அந்த ரகசியம் இப்போதுதான் வெளியாகியிருக்கிறது. அது நயன்தாராவை ஒரு மிருகமாக நினைத்து சிம்பு பாடுகிற பாடலாம். அதையே சாக்காக கொண்டு நாயே பன்னியே என்றெல்லாம் வார்த்தைகளை போட்டு அந்த பாடலை அவரே எழுதியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பாடல் வரிகள் இவ்ளோ கேவலமா இருக்கு. அதுவும் என்னை திட்ற மாதிரி. நான் எதுக்கு நடிக்கணும் என்கிறாராம் நயன்தாரா.

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் டேஷ் என்றோ, நாய் என்றோ திட்டப்படும் அவர்…? இப்ப புரியுதா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நம்பியவரை நட்டாற்றில் விட்டாரா விஜய் சேதுபதி?

சினிமாவுலேயும் அரசியலிலேயும் எதிரியும் கிடையாது. நண்பனும் கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவற்றை தீர்மானிக்கும். கூட்டணி அரசியல், பாட்டனி அரசியலெல்லாம் பிறகு, ‘பேட்டா’ அரசியல் ஆவதையெல்லாம் மக்கள் பார்த்துக்...

Close