ஏ.எம்.ரத்னத்தை தொங்கலில் விட்ட நயன்தாரா?
‘நானும் ரவுடிதான்’ திரைக்கு வந்த சில நாட்களுக்குள்ளேயே அந்த டீமை கொத்தி விட நினைத்தார் ஏ.எம்.ரத்னம்! அஜீத் இவரை கழற்றி விட்ட நேரம் அது. மார்க்கெட்டில் ஸ்டடியாக கால் ஊன்றிவிட்ட ரத்னத்திற்கு, இந்த டீம் அப்படியே கிடைத்ததில் அலாதி ஆனந்தம். ஆனால் கேப்டன் ஆஃப் த ஷிப் விக்னேஷ் சிவன் அல்ல, நயன்தாராதான் என்பதை நிரூபித்தது ஜோடி. தன் காதலர் விக்னேஷிடம் சொல்லி, ஏ.எம்.ரத்னம் படத்தை தள்ளிப் போட வைத்துவிட்டு அஜீத் சூர்யா என்று கவனத்தை செலுத்தினார் நயன். எல்லாவற்றையும் மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார் ஏ.எம்.ரத்னம்.
எப்படியோ போராடி சூர்யாவின் கால்ஷீட்டை வாங்கி காதலருக்கு கொடுத்துவிட்டார் நயன். தனக்கு கொடுத்திருந்த தேதிகளைதான் இந்த ஜோடி இந்த படத்திற்கு திருப்பி விடுவதாக நினைத்த ரத்னம், நயன்தாராவிடம் கடுமையாக சண்டை போட்டதாக கூறுகிறது கோடம்பாக்கம். கடைசியாக ஒரு டீலுக்கு வந்தாராம் இவர். “விக்னேஷ் சிவன் கூட வேணாம். உங்க கால்ஷீட் இருந்தா போதும். விஜய் சேதுபதியோ, அல்லது வேறு ஹீரோவோ வைச்சு நல்ல டைரக்டர் காம்பினேஷனுடன் நான் படம் தயாரித்துக் கொள்கிறேன்” என்றாராம்.
என்ன காரணத்தாலோ இன்னமும் ஏ.எம்.ரத்னம் கம்பெனிக்கு தேதிகள் கொடுக்காமல் இழுத்தடிக்க ஆரம்பித்திருக்கிறார் நயன்தாரா. போகிற போக்கை பார்த்தால், அட்வான்சை திருப்பிக் கொடு என்ற பஞ்சாயத்து ஆரம்பிக்கலாம்…
எப்போதுமே நயன்தாராவின் தலைக்கு மேல் மழை பொழியும். அதைவிட வேகமாக இடி இடிக்கும். நயனின் டிசைன் அப்படி!
To listen the audio click below :-