பிரபல ஹீரோவை அவமதித்தாரா நயன்தாரா? ஆத்திரத்தில் ரசிகர்கள்!

ரஜினி கமல் பட ஷுட்டிங் ஸ்பாட் போலவே இருக்கிறதாம் நயன்தாரா நடிக்கும் படப்பிடிப்பு ஏரியா. ‘மேடம் கிளம்பிட்டாங்க. புளோருக்குள் கார் வந்திருச்சு. கேரவேன்லே ஏறப்போறாங்க. மேக்கப் போட ஆரம்பிச்சுட்டாங்க. செருப்பை மாட்றாங்க. படியில இறங்குறாங்க’ என்று ஏகப்பட்ட பில்டப் கொடுக்கிறார்களாம் உதவி இயக்குனர்கள். இவர்களாவது பரவாயில்லை. அதையும் தாண்டி அலட்டுகிறார்களாம் நயன்தாராவின் உதவியாளர்கள். ஸ்பாட்டில் யாராவது சத்தமாக தும்மினால் கூட, ‘யோவ்… மூக்கை வச்சுகிட்டு சும்மாயிருக்க மாட்டியா? மேடத்துக்கு டிஸ்ட்ரப் ஆகுதுல்ல?’ என்று தும்மியவரின் மூக்கையே பிடுங்கி எறிகிற அளவுக்கு டென்ஷன் ஆகிறார்களாம்.

சுற்றி வேள்வித் தீ கொதித்தால், சிவனேன்னு கிடக்கிற ஆன்மா கூட சிலுப்பிகிட்டு எழுமல்லவா? அதுதான் நடக்கிறது நயன்தாரா விஷயத்தில். அண்மையில் ஒரு விருது விழாவில் இவருக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டதல்லவா? மேடையில் இவருக்கு அந்த விருதை கொடுக்க அழைக்கப்பட்டவர் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர். அவரும் சந்தோஷமாக மேடைக்கு வந்துவிட்டார். ஆனால் மைக்கை பிடுங்கிய நயன்தாரா, “நான் இந்த விருதை நானும் ரவுடிதான் பட இயக்குனர் விக்னேஷ் சிவன் கையால் வாங்க நினைக்கிறேன். அதனால் அவரை மேடைக்கு வரவழைச்சு அவர் கையால் இந்த விருதை கொடுங்க” என்று கூறிவிட்டார்.

இதனால் முகம் சிறுத்துப் போய்விட்டது அந்த தெலுங்கு ஹீரோவுக்கு. சம்பவம் நடந்து பல நாட்கள் ஆன பின்பும் நயன்தாராவின் எண்களுக்கு மாறி மாறி ஏதேதோ நம்பர்களில் இருந்து போன் வருகிறதாம். பேசுகிறவர்கள் இந்திய மொழிகளில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் அர்ச்சனை செய்கிறார்களாம். எல்லாம் அவரது வேலையாகதான் இருக்கும் என்று இவர் ஒரு முடிவுக்கு வந்தாலும், வெந்த காதுக்கு வெங்கலமா பூச முடியும்?

அட்ராசிடி தொடர்ந்தால் போலீசுக்கு போவதை தவிர வேறு வழியில்லை என்கிற அளவுக்கு காண்டாகி கிடக்கிறாராம் காதும்மா… ஐ மீன் காதம்பரி!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Kabali is my carrier best movie & my life time favourite says director – Pa.Ranjith

Close