அக்கா இங்கதான் இருக்கு, கூடவே அத்தானும் இருக்காரு…! வந்தது மெசெஜ், நொந்தனர் ஹீரோஸ்!
“அழுத கண்ணீர் அத்தனையும் அவரை கழுவி ஊற்றவாவது பயன்பட்டதே…” நிலைமையில்தான் இருக்கிறது கோடம்பாக்கத்தின் கொள்ளை பசங்க மனசு! பார்த்தால் பார்த்த மாத்திரத்திலேயே இழுத்து இம்சித்துவிட்டு போகும் பேரழகி நயன்தாராவால், கோடம்பாக்கத்தில் அவரோடு பழகிய எல்லார் கண்களிலும் வெங்காயம் உரித்த எபெக்ட்! அவள் பறந்து போனாளே… என்னை மறந்து போனாளே… பாடலை ஒலிக்க விட்டுவிட்டு, டேப் ரொக்கார்டரின் முதுகிலெல்லாம் மூக்கை சிந்தி துடைத்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு போன வாரம் முழுக்க ஒரே டென்ஷன் டென்ஷன்…! ஏன்?
சென்னை தாஜ் கிளப் ஹவுஸ் ஓட்டலில் வந்து தங்கிவிட்டார் நயன்தாரா. இத்தனைக்கும் அவருக்கு சென்னையில் ஷுட்டிங்கும் இல்லையாம். வந்தவரை சந்திக்க போனாராம் இயக்குனர் விக்னேஷ் சிவன். இருவரும் அந்த ஓட்டல் முழுக்க ஒன்றாக சுற்றியிருக்கிறார்கள். காபி ஷாப்பில் உட்கார்ந்து கதையளந்திருக்கிறார்கள். சும்மாயிருக்குமா கொள்ளிக்கட்டை கண்கள். அக்கா இங்கதான் வந்திருக்கு. கூடவே அத்தானும் இருக்காரு என்று இளம் ஹீரோக்களுக்கு எஸ்.எம்.எஸ் தட்டிவிட்டார்களாம்.
“டேய்…. பார்த்த நீ அப்படியே போய் தொலைய வேண்டியதுதானே? அதையெதுக்கு மெனக்கெட்டு எனக்கு மெசெஜ் அனுப்பி மென்னு தின்ன வைக்கிற?” என்று எரிச்சலாகியிருக்கிறார்கள். இதில் ரொம்ப எரிச்சல் பட்டவர் அந்த ஒல்லிப்பிச்சான்தானாம்.
குறிப்பிட்ட சிலரோட வயிறுக்கு ஆசிட் அடிக்கணும்னே மெனக்கட்டு வந்திருப்பார் போல! கல்யாணம் முடியறதுக்குள்ள கோடம்பாக்கத்துல பாதி பேருக்கு அல்சர் ஆப்ரேஷன் நடந்து முடிஞ்சுரும் போலிருக்கே?