ஆர்யா பதில்! அதிர்ச்சியில் நயன்தாரா?
‘பிக்கப் டிராப் நடிகர் ’ என்றே பேர் வாங்கிவிட்ட ஆர்யாவுக்கு, இப்போது ஒரு நடிகையை ‘டிராப்’ பண்ணுவதுதான் பெரும் லட்சியமாக இருக்கிறது. யார் வம்பும் நமக்கு வேணாம்ப்பா… என்பதால் இருக்கலாம். அல்லது இவருக்கே அவர் அலுத்துப் போயிருக்கலாம். எப்படியோ? இந்த நியூஸ் ஆனந்த குயிலின் பாட்டு அல்ல! அந்த குயிலுக்கே வைக்கப்பட்ட வேட்டு!
தெலுங்கில் ‘பொம்மரிலு’ என்ற சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததால், பொம்மரிலு பாஸ்கர் என்றே எல்லாரும் அழைக்கிற அளவுக்கு புகழ் பெற்றுவிட்ட பாஸ்கர் இப்போது தமிழ் தெலுங்கு இருமொழி படம் ஒன்றை இயக்கப் போகிறார். ஆர்யா, சித்தார்த், நாகசைதன்யா ஆகிய மூவரும்தான் இப்படத்தின் ஹீரோக்கள். தெலுங்கில் ஆர்யா பேமஸ் இல்லையென்றாலும் மற்ற இருவரும் டாப்! படத்தின் ஹீரோயினும் தெலுங்கு மஹா ஜனங்களுக்கு பரிச்சயமானவராக இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தாராம் பாஸ்கர். இவர் அழைத்தால் ஓடோடி வந்து கால்ஷீட் கொடுப்பதற்கு ஒரு டஜன் முன்னணி நடிகைகள் தயாராக இருந்தாலும், அவர் மனசில் முதல் ‘டிக்’கில் இருப்பவர் நயன்தாராதான்.
நம்ம படத்தில் நடிக்கிறீங்களா? என்று அவசரப்பட்டு கேட்டும் விட்டார் நயன்தாராவிடம். அவரும் ‘ஓ.கே ஓ.கே’ என்று டபுள் ஓ.கே சொன்ன பின்னால்தான் மேற்படி விஷயமே ஆர்யாவுக்கு தெரிந்ததாம். அலறியடித்துக் கொண்டு பாஸ்கரிடம் பேசிய ஆர்யா, ‘காரணமெல்லாம் கேட்காதீங்க, இந்த படத்தில் நயன்தாரா வேணாம். ப்ளீஸ்’ என்ற கெஞ்சாத குறையாக கெஞ்சியிருக்கிறார். கருவாடு வேணாங்கிற பூனையை முதன் முறையாக பார்த்த அதிர்ச்சியில் பாஸ்கர் இருக்க, ‘நம்ம தோஸ்து ஏன் இப்படி சொல்லிச்சு?’ என்கிற பேரதிர்ச்சியில் இருக்கிறாராம் நயன்தாரா.
மல்லாக்கொட்டைய உடைச்சு பார்த்தா, கர்லா கட்டையா இருக்கும்? கடவுளே… கடவுளே…!