ஆளே இல்லாமல் ஷுட்டிங், அரை நிர்வாணம்? பிட்டு பட ரேஞ்சுக்கு இறங்கிய ஹீரோயின்!
தனக்கு ஓயாமல் செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் ஒருவனின் ‘ஆ———-றுப்பை’ அறுப்பதுதான் சாரிகாவின் முதல் பட க்ளைமாக்ஸ். ஐயோ… இந்த பொண்ணு எப்படிறா இப்படியொரு கேரக்டர்ல நடிச்சுது? என்று சினிமாவுலகம் ஆச்சர்யப்பட்டாலும், அதற்கப்புறம் கூட அவருக்கு பெரிய படங்கள் எதுவும் அமையவில்லை. கடைசியாக அவர் நடித்த கதம் கதம் படத்தை இராம.நாராயணனின் தேனான்டாள் பிலிம்ஸ் வெளியிட்டது. அவருக்கு ஜோடியாக சதுரங்க வேட்டை நட்ராஜ் நடித்திருந்தார். அப்படியிருந்தும் சினிமாவுலகம் சாரிகாவை சைட் டிஷ்ஷாகவேதான் பார்க்கிறது.
தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘நிராயுதம்’ என்ற படத்தில் அரை நிர்வாணமாக நடிக்க விட்டுவிட்டார்கள் சாரிகாவை. ஐடி துறையில் பணியாற்றும் இவர் நள்ளிரவில் கால் டாக்சியில் வீடு திரும்புவாராம். வழியில் இவருக்கு மயக்க மருந்து கொடுத்து ஒரு அறையில் அடைத்து வைக்கிறார்கள். அதுவும் துண்டு துணியில்லாமல். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதை சமீபத்தில் படமாக்கினாராம் டைரக்டர் ராஜதுரை.
ஷுட்டிங் ஸ்பாட்டில் கேமிராமேன், மற்றும் சிலரை தவிர வேறு யாரையும் அனுமதிக்காமல் இந்த காட்சியை எடுத்தார்களாம். ஒரே ஒரு நாளிதழை போர்த்திக் கொண்டு அவர் இங்கும் அங்கும் நடமாடுவதை வைத்த கண் வாங்காமல் படம் பிடித்திருக்கிறது கேமிரா. சம்பந்தப்பட்ட நாளிதழ் காரர்கள் நல்ல விளம்பரமாச்சு.. என்று பொறுத்துக் கொள்கிறார்களோ, அல்லது பெயரை கெடுத்துட்டாங்களே என்று பொங்குகிறார்களோ? அது அவர்களுக்கே வெளிச்சம்.
ஆமாம்… யாரையும் அனுமதிக்காம ஷுட்டிங் எடுத்தாலும், வெளிச்சத்துல பந்தி வச்சுதானே ஆகணும்? பார்க்கலாம், பேப்பர்ல என்ன எழுதியிருக்குன்னு?