ஐஐடி இளைஞர் ஜாஸ்மினை மணந்தார் நடிகை பத்மப்ரியா! அர்ஜென்ட்டாக நடந்த ஆர்டினரி திருமணம்!

‘காட்டி’ நடித்து பெயர் வாங்கும் நடிகைகளுக்கு மத்தியில் ‘நடித்துக்காட்டி’ பெயர் வாங்கியிருப்பவர் பத்மப்ரியா. தென்னக மொழிகளில் சுமார் 48 படங்களில் நடித்திருக்கும் பத்மப்ரியா, தமிழில் டைரக்டர் சேரனின் அறிமுகம். தேசிய விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வாங்கியிருக்கிறார் அவர். தவமாய் தவமிருந்து மற்றும் பொக்கிஷம் படங்களில் நடித்திருந்தார். மிருகம் படத்தில் நடித்தபோதுதான் டைரக்டர் சாமி இவரை கன்னத்தில் அறைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கப்புறம் தமிழ் படங்களில் நடிப்பதை பெரும்பாலும் குறைத்திருந்தார் பத்மப்ரியா.

அடிப்படையில் நல்ல படிப்பாளி, ஊர் சுற்றுவதில் பிரியம் உள்ளவர். ஓடி ஓடி நடித்து கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாத எளியவர் என்றெல்லாம் பத்மப்ரியாவுக்கு கூடுதல் அந்தஸ்தை தருகிறது கலையுலகம். அப்படியாகப்பட்ட பத்மப்ரியா காதலில் விழுந்ததுடன் கல்யாணத்தையும் செய்து கொண்டிருக்கிறார். இன்று காலை அவரது வீட்டில் நடந்த எளிய விழாவில் இந்த திருமணம் முடிந்ததாக தகவல்.

மணமகன் பெயர் ஜாஸ்மின். ஐஐடி யில் மெக்கானிகல் என்ஜினியரிங் படித்திருக்கிறார். இவரும் பத்மப்ரியாவும் நியூயார்க்கில் சந்தித்தபோது காதல் மலர்ந்ததாம்.

எப்ப வேணா அழைக்கலாம். எக்கச்சக்கமாக நடிப்பை பிழியலாம் என்று நல்ல பட இயக்குனர்களின் ரிசர்வேஷனில் வைக்கப்பட்டிருந்த ஒரு அற்புத நடிகையின் இடம் காலியாகிவிட்டது. இந்த காலியிடத்தை அவரே விரைவில் வந்து நிரப்பலாம். அல்லது நிரப்பாமலும் இருக்கலாம். ஏனிவே… வாழ்த்துக்கள் பத்மா!

Read previous post:
கத்தி கதை திருட்டு வழக்கு வாபஸ்! வேறொரு வியூகம் வகுக்கிறாரா கோபி? வெளிவராத பின்னணி குமுறல்கள்!

நேற்று மாலை ‘கத்தி’ கதைத் திருட்டு விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது ஏ.ஆர்.முருகதாஸ் மீது போட்டிருந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டார் மீஞ்சூர் கோபி. நீதிமன்றமும்...

Close