சிக்கினார் பிரபுசாலமன்! வச்சு செஞ்ச (?) சங்கம்!
வழுக்கி விழுந்தால் கூட ‘தேங்க்யூ ஜீசஸ்’ என்று வாய் நிறைய வணங்கும் பிரபுசாலமனுக்கு, அந்த ஜீசஸ்சே நேரடியாக கண் திறந்தால்தான் கடன் அடையும் போலிருக்கிறது. அவ்வளவு பெரிய தொல்லையில் சிக்கிக் கொண்டார் மனிதர். எல்லாம் தொடரியால் வந்த வினையும், 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் போகும் போதும் பாவாடையை பறக்க விடாத கிராபிக்ஸ்சும்தான் காரணம். தான் என்கிற ஆணவம் தலைக்கு ஏறும்போதெல்லாம், காலில் முள் வைத்து எச்சரித்துவிடும் காலம். அப்படியொரு முள்ளாக அமைந்துவிட்டது தொடரி.
படத்தின் செலவை சொன்னதைவிட பல மடங்கு இழுத்துவிட்டதுடன், சொன்ன தேதியில் படத்தையும் முடித்துக் கொடுக்காமல் இழுத்தடித்துவிட்டார் பிரபுசாலமன். இதனால் ரிலீஸ் தேதியையும் முறையாக அறிவிக்க முடியாமல் தவித்த தயாரிப்பாளருக்கு, படத்தின் அரைகுறை பிரசன்ட்டேஷன் பெரும் பொருளாதார தோல்வியை கொடுத்துவிட்டது. பரிதவித்துப் போன சத்யஜோதி தியாகராஜன், பிரபுசாலமன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துவிட்டார்.
இரு தரப்பையும் அமர வைத்து விசாரித்த சங்கம், சத்யஜோதி தியாகராஜன் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்து பிரபுசாலமன் பெரும் தொகை ஒன்றை திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவு போட்டுவிட்டது. கிட்டதட்ட மூன்று கோடி நஷ்ட ஈடு என்றும் கூறப்படுகிறது. இந்த தொகையை அவர் இயக்கி இனிமேல் வெளிவரப் போகும் படங்களில் தலா ஒரு கோடியாக திருப்பித்தர உத்தரவாம்.
ஓ… ஜீசஸ்!
https://youtu.be/MEhHzEcBDBM