உங்க படத்தில் நடிக்க நான் எவ்ளோ சம்பளம் கொடுக்கணும்! அதிர வைத்த பிரகாஷ்ராஜ்!
சில காம்பினேஷன்கள் அரிதானவை! பெருமைக்குரியவை! அப்படியொரு அற்புதமான காம்பினேஷன்தான் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனும் பிரகாஷ்ராஜூம்! இருவரும் இணைந்த ‘காஞ்சிவரம்’ திரைப்படத்தை இப்போது நினைத்தாலும் கண்களில் குளம் கட்டி நிற்கும். உலக பட விழாக்களில் தமிழ்நாட்டின் பெருமையை சொன்ன காஞ்சிவரத்தை அடுத்து இருவரும் இணையும் படம்தான் ‘சில சமயங்களில்!’ ஆச்சர்யம் என்னவென்றால், இப்பவே அமெரிக்காவின் கோல்டன் குளோப் விருது விழாவில் திரையிட தேர்வாகிவிட்டது சில சமயங்களில்.
“ஆஸ்கர் விருதை நெருங்கிட்டோம்” என்று சந்தோஷப்பட்டார் பிரகாஷ்ராஜ். இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜை அழைத்து பிரியதர்ஷன் கதை சொல்லி முடித்ததும், ச்செல்லம் கேட்ட முதல் கேள்வி இதுதான். “உங்க படத்தில் நடிக்க நான் எவ்ளோ சம்பளம் கொடுக்கணும்!”
இப்படத்தை பிரபுதேவா ஸ்டூடியோஸ் சார்பாக பிரபுதேவாவும், ஐசரி கணேஷும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். முதல் பிரதி அடிப்படையில் படத்தை உருவாக்கி தந்திருப்பவர் டைரக்டர் ஏ.எல்.விஜய்.
ஐசரி கணேஷ் படத்தை பற்றி என்ன சொல்கிறார்? “சம்பாதிக்கணும்னு இந்த படத்தை நாங்க எடுக்கல. பெயர் வாங்கணும்னுதான் எடுத்தோம். 23 நாட்களில் இந்த படத்தை முடிச்சுக் கொடுத்துவிட்டார் டைரக்டர் பிரியதர்ஷன். சொன்ன கதையை சொன்ன நாளில் எடுத்துக் கொடுக்கிற டைரக்டர் தமிழ்ல இல்லவே இல்ல. அந்த ஒரு விஷயத்துக்காகவே நான் என்னோட நன்றியை அவருக்கு தெரிவிச்சுகுறேன்!”
விஷாலின் அண்ணியும் நடிகையுமான ஸ்ரேயா ரெட்டிதான் இப்படத்தை தயாரிப்பதாக இருந்ததாம். ஐசரி கணேஷ் கேட்டதும், அதை கொடுத்து உதவிய அவரையே இந்த படத்தில் முக்கிய ரோலிலும் நடிக்க வைத்திருக்கிறார் பிரியதர்ஷன்!
To listen audio click below :-