தனுஷ் மேல செம காண்டு! ஏன் பிரசன்னா இப்படி?
கதவுக்கு அந்தப்பக்கம் பாதிரியாரின் காதுகளும், கதவுக்கு இந்தப்பக்கம் பாவப்பட்ட ஜன்மத்தின் உண்மைகளும் இருப்பதுதான் சர்ச்-களின் விசேஷம். சமயங்களில் சினிமா விழாக்களையும் சர்ச் ல் நடக்கும் பாவ மன்னிப்பு சமாச்சாரம் ஆக்கிவிடுவார்கள் சிலர். மேடையிலேயே அழுது, புரண்டு, உணர்ச்சி வசப்பட்டு… நிகழ்ச்சியை ரசிக்க வந்தவர்களின் மீது ஊமைக்குத்து விடுவார்கள்.
நல்லவேளை.. அந்தளவுக்கு போகாவிட்டாலும், பவர் பாண்டி பட விழாவில் சில உண்மைகளை பேசி புருவத்தை உயர வைத்தார் நடிகர் பிரசன்னா. (சினேகாவின் புருஷன் என்றால் சட்டென்று புரிந்து கொள்வீர்கள்). அப்படி என்னதான் சொன்னார் பிரசன்னா?
பொதுவாகவே சினிமாக்காரர்கள் மத்தியில் தனுஷ் மீது செம காண்டு இருக்கு. அவரது வளர்ச்சியையும் இப்ப இருக்கிற பொசிஷனையும் சிலரால் ஜீரணிச்சுக்கவே முடியறதில்ல. நானும் அவர் மீது கொஞ்சம் காண்டா இருந்தது உண்மைதான். (வாட் இஸ் மீன் பை காண்டு என்பவர்கள் இதோடு இந்த செய்தியை விட்டுவிட்டு வேறு பேஜ்க்கு போவதுதான் முறை) அவர் எனக்கு போன் பண்ணி இப்படியொரு கேரக்டர் இருக்கு. பண்றீங்களா? என்று கேட்டப்ப, சற்று தெனாவெட்டாதான் இருந்தேன். ஆனால் என் மனைவி சினேகாதான் உங்களுக்கு மெனக்கெட்டு போன் பண்ணி ஒரு கேரக்டர்ல நடிக்க கூப்பிடுறாங்க. போய் என்னன்னுதான் கேட்டுட்டு வாங்களேன்னாங்க. அதற்கப்புறம் வந்துதான் தனுஷை நேரில் சந்தித்தேன். நிஜமாகவே அற்புதமான கேரக்டர் அவர் என்றார் பொய்யே கலக்காமல். (அப்டீட்றிங்க?)
பவர் பாண்டி படத்தின் செகன்ட் பார்ட்டும் தயாராகி வருகிறது. அதிலும் பிரசன்னா இருக்கிற அளவுக்கு பிரண்ட்ஷிப்பை திக் ஆக்கிக் கொண்டார்களாம் இருவரும்.
முக்கிய குறிப்பு- பவர் பாண்டி என்று தலைப்பு வைத்தால் வரி விலக்கு இல்லை என்பதால் பா. பாண்டியாகிவிட்டார் பவர் பாண்டி.
https://youtu.be/L_LP5O_EJPo
இந்தியன் பிரூஸ்லி தனுஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்