ஏழைகளின் ஆன்ட்ரியாவோடு ஸ்மைல் ப்ளீஸ் பிரேம்ஜி

புன்னகைக்கு செலவில்லை என்ற காலம் போய் செலவில்லாமல் புன்னகையில்லை என்ற காலத்திலிருக்கிறோம் நாமெல்லாம். இந்த நேரத்தில் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற ஆல்பத்தை ஏகப்பட்ட செலவு செய்து எடுத்து வருகிறார் மகேஷ். ஒரு சினிமா இயக்குனர் ஆகணும்னு வந்தேன். எல்லாரும் ஒரு குறும்படம் எடுத்து தன்னை நிரூபிச்சுட்டு சினிமாவுக்கு வர்றது பேஷனா இருக்கு. நான் அழகான மியூசிக் ஆல்பத்தை வண்ணமயமாக ஷுட் பண்ணி என் திறமையை நாட்டுக்கு காண்பிச்சுட்டு அப்புறம் படம் இயக்க வரலாம்னு இருக்கேன்…. எப்புடி?’ என்று சிரிக்கிறார்.

மது குடித்தவனுக்கு மப்பு நிச்சயம் என்பது போல, ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்று தலைப்பு வைத்தாலும் வைத்தார், இந்த ஆல்பத்தை எவ்வித டென்ஷனும் இல்லாமல் வெகு ரிலாக்ஸ்டாக எடுத்து வருகிறாராம். ‘இன்றைய இளைஞர்களுக்கு பக்தி முக்கியம் என்கிற விஷயத்தையும் சொல்லணுமில்லையா? ஓம் நமச்சிவாய என்ற மாணிக்க வாசகரின் வரிகளை திருவண்ணாமலை கும்பகோணம் போன்ற ஊர்களிலிருக்கும் சிவன் கோவிலில் படமாக்கியிருக்கிறேன். அந்த ஒரு பாடல்தான் பக்தி. மற்றதெல்லாம் மனுஷனுக்கு தேவையான சக்திக்கான பாடல்கள்தான்.

ஸ்ரீகாந்த் தேவா, பிரேம்ஜி ஆகிய இருவரும் பாடி ஆடுகிற காட்சிகளை அழகான செட் போட்டு படமாக்கியிருக்கிறேன். இதற்காக ஸ்ரீகாந்த் தேவாவை மலேசியாவுக்கே அழைத்துசென்று ஆட வைத்திருக்கிறோம் என்கிற மகேஷ், வெங்கட்பிரபுவுக்கு ஜோடியாக ‘கலாப காதலன்’ பட நாயகி அக்ஷயாவை ஆடவிட்டிருக்கிறார். பார்ப்பதற்கு ஏழைகளின் ஆன்ட்ரியா போலவே இருக்கிறார் இந்த அக்ஷயா.

இன்னும் ஒரு பாடலை ஷுட் பண்ணனும். அதில் பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் போபோ சசி பாடவிருக்கிறார். அப்படியே இன்னொரு சந்தோஷம்… இந்த ஆல்பத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனும் ஆடுறதுக்கு தயாராகிட்டு இருக்கார் என்றார் மகேஷ்.

பவருக்கு இருக்கிற கடனுக்கு பெரிய ‘பில்‘லா போடுவாரே… என்றால், ‘குவாலிட்டிக்காக கொட்டி கொடுக்கறதுல தப்பு என்ன இருக்கு?’ என்றார். புன்னகையின் விலை அவரவர் பாக்கெட் வெயிட்டை பொறுத்தது போலிருக்கு!

Mahesh wants to enter films through his Smile Please album

Mahesh who is creating a music album titled ‘Smile Please’ says that while most of his contemporaries wanted to enter filmdom showcasing their talents through short films and posting them in social network, he has decided to enter the industry through his richness in music album, said Mahesh with a loud laugh.

Srikant Deva and Premgi Amaran have contributed to the album and also shake their legs for the album. Srikant Deva was flown to Malaysia to shake his legs there which was picturised with rich colours, he added. Kalaba Kadhalan girl Akshaya will also be seen in the album along with Premgi and Srikant Deva.

Barring for one song ‘Ohm Namasivaya’ which has spiritualism was shot in Thiruvannamalai and Kumbakonam, the rest of the songs are rhythmic as well as meaningful, he noted. One song is to be shot in which Telugu music composer BoBo Sasi will be seen singing and dancing.

He also said with glee in his face that he had roped in Power Star Srinivasan for the album. When asked if his demands would be high, he said for quality money is not the criteria, he reasoned out.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இனம் படத்தை நிறுத்திய லிங்குசாமிக்கு நன்றி! மவுனம் கலைத்த சீமான்

இனம் படம் பற்றிய சர்ச்சையில் சீமானின் ஆக்ரோஷம் வெளிப்படவில்லையே என்று ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்க, திடீரென மும்பையில் திரண்ட நாம் தமிழர் அமைப்பினர் லிங்குசாமியை முற்றுகையிட்டனர்....

Close